சென்னையில்,தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது, இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் சங்கத் தலைவர் பதவிக்கு பட அதிபர்கள், டி.சிவா,கே.கோதண்டராமையா,ஆர். இராதாகிருஷ்ணன்,கலைப்புலிசேகர்,:ஜெயகிருஷ்ணன் (மனுதள்ளுபடி) நடிகர்கள் பிரகாஷ்ராஜ்,விஷால்.(நிறுத்தி வைப்பு). ஆகிய 7 பேர் போட்டியிடுகின்றனர்.இதன் காரணமாக சங்கத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது செயலாளர்கள் பதவிக்கு 8பேர்களும்,துணைத்தலைவர் பதவிக்கு 9 பேர்களும்,பொருளாளர் பதவிக்கு 5 பேரும், செயற்குழுவிற்கு 97 பேர்களும் போட்டியிடுகின்றனர் இந்நிலையில்,தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் விஷால் பொதுச் செயலாளராக இருப்பதால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதையடுத்து,விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்தார்..இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ராஜேஸ்வரன் கூறுகையில், விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவரது வேட்புமனு மீது நீதிமன்ற உத்தரவுப்படி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 99 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் . இதில் 2 பேரின் மனுவை விதி முறை காரணமாக நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் திட்டமிட்டபடி மார்ச் 5ல் தேர்தல் நடைபெறும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.