உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் வரும் தீபாவளியன்று வெளியாகிறது வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் சிறப்பு காட்சியாக ராணுவ அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது இந்நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது,” படப்பிடிப்பு நடைபெற்றபோது இருந்த பதற்றத்தைவிட படத்தினை ராணுவ வீரர்கள் பார்க்கின்றார்கள் என்றபோது இன்னும் அதிகரித்தது. குறிப்பாக ராணுவ வீரர்கள் என்ன சொல்லுவார்கள் என்ற பதற்றம் ஒட்டிக்கொண்டது.
படத்தினை இடைவேளை வரை பார்த்த சீனியர் ராணுவ வீரர் என்னிடம் வந்து, ‘யூ ஆர் இன் ராங் புரொபெஷன்’ எனக் கூறினார். படம் முடிந்த பின்னர் அதே மூத்த ராணுவ அதிகாரி என்னிடம் வந்து ‘ நான் உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருகின்றேன், என்ன சொல்றீங்க எனக் கேட்டார்.இதை கேட்ட நான், ‘இதுதான் சார் நீங்கள் எனக்கு கொடுக்கின்ற விருது’ என மகிழ்ச்சியோடு கூறினேன்.மேலும் நானும் மேஜர் முகுந்தும் மிடில் கிளாஸில் பிறந்தவர்கள் என்பதால் என்னால் அவரை எளிதாக உள்வாங்க முடிந்தது. நான் எந்த இடத்திலும் சினிமாவாக நினைத்து நடிக்கவில்லை என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டினார்”என்கிறார்.












