தமிழ்த்திரையுலகில் விஜய், அஜித், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடனும், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இளம் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரிஷா 41 வயதை எட்டியுள்ள நிலையிலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி, சூர்யா 45 ஆகிய படங்களிலும், ஆர் ஜே பாலாஜியின் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் குட் பேட் அக்லி படத்திலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்திலும், மலையாளத்தில் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக ஐடென்டிட்டி படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் இன்னும் திருமணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகை திரிஷா, தனது மகனாக செல்ல நாய்க்குட்டியான ‘ஸோரோ’வை வளர்த்து வந்தார்.இந்நிலையில் அவர் செல்ல மகனாக வளர்த்து வந்த நாய்க்குட்டி ‘ஸோரோ’ நேற்று இறந்து போனது.
இதைக்கண்டு கதறி அழுது துடித்த நடிகை திரிஷா சோகம் தாங்காமல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, கிறிஸ்துமஸ் தினத்தில் எனது மகன் ஜோரோ இறந்துவிட்டான். அதனால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை நான் கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கிறேன். என்னை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்குத் தெரியும் ஜோரோ இல்லாமல் என் வாழ்க்கை பூஜ்ஜியமாக மாறிவிட்டது. இப்போதைக்கு என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. சில நாட்கள் வேலைக்கு வரப்போவதில்லை. சோஷியல் மீடியா உள்ளிட்ட எதிலும் ஆர்வம் செலுத்த முடியாது என த்ரிஷா உருக்கமாக தனது செல்ல நாய்க்குட்டி உயிரிழந்த தகவலை அறிவித்துள்ளார்.மேலும் தனது வீட்டிலேயே ‘ஸோரோ’ அடக்கம் செய்யப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ள அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.












