நடிகை அபிநயா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். புகைப்படத்தில், மோதிரங்கள் மாற்றிக்கொண்ட இருவரது கைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இப்புகைப்பட பதிவில்,`எங்க பயணம் இன்னைக்கு ஆரம்பம்`னு குறிப்பிட்டுள்ள அபிநயா, வெறும் கைகள் மற்றும் மோதிரத்தை மட்டுமே காட்டி நிச்சயதார்த்தம் ஆகி விட்டதாக கூறியுள்ளார் அதே சமயம்,யார் மாப்பிள்ளை என்பதை அவர் குறிப்பிடவில்லை.