காற்று வெளியிடை இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ,சூர்யா , கார்த்தி , அதீதி ராவ் ஹைதாரி , ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் , பாடலாசிரியர் மதன் கார்க்கி , ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்..
விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசியது , 25 வருடம் நானும் ரஹ்மானும் ஒன்றாக பயனித்துள்ளோம் , அவரை நான் சந்தித்தது நேற்று போல் உள்ளது. அப்போது அவரை பார்த்தது போல் தான் இப்போவும் அவர் உள்ளார். காற்றுவெளியிடை திரைப்படம் இந்திய விமான படை பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை ஆகும். நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படபிடிப்புக்கு செல்லும் போதும் அவர்களை பார்த்துள்ளேன். அவர்களை பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும்.
நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியை சந்தித்த போது “ நான் விமான படை அதிகாரியை இப்போது இருக்கும் படபிடிப்பு தளத்திருக்கு அருகே எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன் என்றார் “ . அது தான் அவர்கள் . அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் இருக்கும். ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இனைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும்.
நான் அவரிடம் நாளை படபிடிப்பு உள்ளது பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவரை பாடலுக்காக சந்திக்க சென்றால் அவர் தீம் மியூசிக் ரெடி செய்து வைத்திருப்பார். ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்துவிடும். என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையை தேடி பிடித்து கொடுப்பவர் அவர். நான் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும் , ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் நன்றி கூறிகொள்கிறேன் . அடுத்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இனைந்து பணியாற்ற அவரிடம் உங்கள் முன்னால் கேட்டு கொள்கிறேன்என்றார் இயக்குநர் மணிரத்னம்.