சின்னத்திரை புகழ் நடிகை ‛மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ‛வம்சம், ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நந்தினி. சினிமாவில் பிரபலமானதை விட சின்னத்திரையில் தான் இவர் மிகவும் பிரபலம்.விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்தார். அப்போது முதல் ‛மைனா; புகழ் அவரோடு சேர்ந்து கொள்ள மைனா நந்தினி என்றே அழைக்கப் பட்டார் . கலக்கப்போவது யாரு என்ற தொலைக்காட்சி நி கழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார். தற்போது ஜீ தமிழில் குழந்தைகள் நிகழ்ச்சி, டார்லிங் டார்லிங் தொடர் என பிஸியாக இருக்கிறார்.நந்தினி, கார்த்திக்கிகேயன் என்பவரை கடந்தாண்டு 5-ம் தேதி ஜூன் மாதம், காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன், சென்னையில் சொந்தமாக ஜிம் வைத்துள்ளதோடு,ஜிம் மாஸ்டராகவும் உள்ளார். இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், கார்த்திகேயன் நேற்று இரவு விருகம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கி,குளிர்பாணத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருமணமாகி ஓராண்டுகள் ஆகாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை நடிகர்நடிகைகளிடையே இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.