
இந்திய பாராளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார் . மய்ய பிரமுகர்கள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார்கள்.
பாராளுமன்ற பணிகளுக்கிடையில் கமல்ஹாசன் எம்.பி. அகரம் பவுண்டேசனின் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறார். சிறிய அளவில் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் தொடங்கிய அறக்கட்டளைதான் இன்று அகரம் பவுண்டேசனாக உயர்ந்துள்ளது. இதன் நிறுவனர் சூர்யா சிவகுமார். 
எத்தனையோ திறமையான மாணவர்கள் போதிய பொருளாதார வசதிகள் இல்லாமல் கல்வியை இடையில் நிறுத்திவிட்டு வேலை வாய்ப்புகளில் இறங்கி விடுகிறார்கள். அத்தகைய மாணவ மாணவியரை அகரம் பவுண்டேசன் கண்டு பிடித்து கைகொடுத்து உயர்த்தி விடுகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தனது பதவி வழியாக ஒன்றிய அரசு வழங்க விருக்கும் 3௦ கோடியை கல்விக்காக வழங்கபோவதாக அறிவித்திருக்கிறார்.
உயரம் செல்லக்கூடிய தகுதிகள் இருந்தும் பொருளாதாரத் தடையினால் பின் தங்கிப் போகும் ஆபத்து ஏழைகளுக்கு இருக்கிறது. அவர்களுக்கு உதவும் கரமாக சூர்யா சிவகுமாரின் அகரம் பவுண்டேசன் இருந்து வருகிறது. இந்த சேவை அமைப்பின் விழாவில் கலந்து கொள்வதற்காகவே கமல்ஹாசன் எம்.பி. சென்னை வந்திருக்கிறார். விழா நிகழ்ச்சிகள் முடிண்ட பின்னர் அவர் டெல்லி செல்கிறார்.












