தனக்கு பொருத்தமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வரும் துல்கர் சல்மான் தனது 41 வது படத்துக்காக அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார். சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் உருவாகும் இப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இப்படம் இந்நிறுவனத்தின் 10 வது திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் ‘நேச்சுரல் ஸ்டார் ‘ நானி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் . இயக்குநர் புச்சிபாபு சனா கேமராவை இயக்கினார். குன்னம் சந்தீப் , நானி மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இப்படத்தின் முதல் காட்சியை ரவி நெலகுடிடி இயக்கினார். இப்படத்தின் ஒளிப்பதிவை அனய் ஓம். கோஸ்வாமி கையாள, தேசிய விருதை வென்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள்’ நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்கிறது படக்குழு..












