தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தனது 35 வது படமாக தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்..நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த யோகிடா படத்தின் விழாவில் இருவரும் அறிவித்து இருந்தனர் இந்நிலையில் நடிகர் சங்க கட்டிட பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில்,இந்த ஆண்டு இறுதியில் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிவடையும் என்கிறார்கள் இந்நிலையில் இன்று காலை தனது 48 வது பிறந்த நாளை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடினார் .இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். ‘ அதற்கு பதிலளித்த விஷால்,எனது 48 வது பிறந்த நாளை கீழ்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் முதியோர்களுக்கு உணவருந்தி கொண்டாடினோம். அப்பா அம்மா வீடு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வருடா வருடம் இந்த முதியோர் இல்லத்தில் உணவு கொடுப்பதற்கு வருவேன் அந்த வகையில் இன்று முதியோர் இல்லத்தில் கொண்டாடினேன் . தமிழ்நாட்டின் தாய்மார்களும் அம்மாக்களும் அப்பாக்களும் நான் எங்கு சென்றாலும் கேட்கும் கேள்வி உனக்கு எப்போது கல்யாணம் என்பது தான். இன்று இன்று மதியம் 12.30 மணியளவில் அதற்கான தகவலை வெளியிடுகிறேன். என் திருமணம் இந்த வருடமே நடக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்டுமான பணி கடந்த 9 வருடமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மாதம்தான் பொறுமையாக இருந்தால் ஏன் தாமதம் எந்த மாதிரி கட்டிடம் கட்டுகிறோம் என்ற அனைத்து கேள்விகளுக்கும் இரண்டு மாதத்தில் தெரியவரும் என்றவர்,.நடிகர் ரஜினிகாந்த் 50ஆம் ஆண்டு பாராட்டு விழா தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில்,”, ஒரு நடிகர் திரைத்துறையில் 50 வருடம் நீடித்து நடித்து வருகிறார் என்றால் உலக சாதனையாக தான் பார்க்கிறேன். நடிகர் ரஜினிகாந்திற்கு 50ஆம் ஆண்டு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக பரீசிலனை செய்து வருகிறோம்” இவ்வாறு அவர் கூறினார் முன்னதாக சென்னை அண்ணா நகரில் உள்ள விஷாலின் இல்லத்தில், விஷால் – சாய் தன்ஷிகா இருவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும்,. நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டதாகவும் . அதனைத் தொடர்ந்து தடபுடல் விருந்தும் நடந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ,நடிகர் விஷால்,தனது டுவிட்டர் பக்கத்தில் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு,”‛‛இந்த உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எனது சிறப்பு பிறந்தநாளுக்கு வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. இன்று எனது குடும்பத்தினர் மத்தியில் சாய் தன்ஷிகா உடன் நடந்த எனது நிச்சயதார்த்த செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேர்மறையாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறேன். எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன்” என விஷால் குறிப்பிட்டுள்ளார்.












