
இந்திய திரைப்பட, தொலைக்காட்சி படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ( i f t p c ). இந்திய அளவில் மிகப்பெரிய அமைப்பாக இருக்கிறது. இதில் 375 தயாரிப்பாளர்கள் அங்கம் வகிக்கிறார்கள். மிகப்பெரிய டாப் புரடியுசர்ஸ் பொறுப்பில் இருக்கிறார்கள்.
அண்மையில் மிக முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
திரைப்பட விமர்சனங்களுக்காக லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிற இன்ப்ளுயன்சர்ஸ் வளர்ந்து கொண்டிருக்கிற காலம் இது.
சோசியல் மீடியாக்களும் பல இந்த மிரட்டல் வசூலில் இறங்கியிருக்கின்றன .
“இந்த போக்கு திரை உலகத்துக்கு பேரபாயம் .நமக்கு அடித்திருக்கிற அபாய மணி. ‘விமர்சனம் செய்கிறோம் .பல லட்சம் பணம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். கொடுக்க மறுத்தால் இழிவான முறையில் விமர்சனம் வரும்.கிழித்து தொங்க விடுவோம்.தப்பான எதிர்வினை வீடியோக்களை வெளியிடுவோம். வணிக ரீதியாக பேரிழப்புகள் வரும்படி செய்வோம்.என்று மிரட்டுகிறார்கள்.இவர்களை சட்ட ரீதியாக அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளில் சங்கம் இறங்கியிருக்கிறது .”
இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. 
விமர்சனங்களை வரவேற்கிறோம் .ஆனால் மிரட்டி பணம் வசூலிப்பதை ஒருபோதும் அனுமதியோம் என்பதாக அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது.
விமர்சனங்களுக்கு மிரட்டி வசூலிக்கும் ரவுடியிசம் எங்கும் பரவி வருகிறது..
தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டு இருக்கிறது.
பணம் கொடுத்து விமர்சனங்களை எழுத வைத்த ஒரு பிரபலம் ஒரு சங்கத்தில் இருக்கிறார். இந்த அமைப்பு என்ன செய்யப்போகிறது.?
பொதுவாக தமிழ்த்திரை உலகத்தினர் என்ன நினைக்கிறார்கள் ?இயக்குனர் இமயம் பாரதிராஜா, சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன் என்ன செய்யப்போகிறார்கள்?
மும்பையைப்போல தமிழ்நாட்டிலும் நடவடிக்கை பாயுமா ,அல்லது தடவிக் கொடுத்து வளர்த்து விடப்போகிறார்களா?
—தேவிமணி












