
சகல வல்லமையும் சாதிக்கும் வன்மையும் இருந்தால் அரசியலில் மக்களை மாக்களாக மாற்றமுடியும் என்கிற சித்தாந்தத்தை பிஜேபி கையிலெடுத்திருக்கிறது .
கேரளம்,தமிழகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் சனாதனக் கொள்கையை விதைக்க முடியாது என்பது தெரிந்திருந்தாலும் விதைக்கிற முயற்சியை பிஜேபி கைவிடுவதாக இல்லை.
எந்த வகையிலேனும் திராவிட பூமியில் தாமரையை மலரச்செய்தாக வேண்டும் என்கிற வெறி ஆர்,எஸ்,எஸ், தலைமைக்கு இருக்கிறது. ஆந்திரம் ,தமிழகம் இரண்டு மாநிலங்களிலும் பிரித்தாள்கிற சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் சிவப்பு சிந்தனை பூமியில் காவியை பூசப்பார்க்கிறது பிஜேபி.
அதற்கு கிடைத்திருக்கிற ஆயுதம்தான் நடிகர் உன்னி முகுந்தன். இவர் மலையாளியாக இருந்தாலும் பெரும் பகுதியை குஜராத்தில் கழித்தவர். பிரதமர் மோடி கேரளம் வந்திருந்தபோது அவருடன் குஜராத்தியிலேயே பேசி அவரை கவர்ந்து விட்டார்.
இவரை கேரளத்தில் களம் இறக்க முடிவு செய்திருக்கிறது பிஜேபி. அடுத்த முதல்வர் இவர்தான் என்கிற பிரசாரம் இப்போதே பரவத் தொடங்கி இருக்கிறது.
“மா வந்தே” என்கிற படத்தில் உன்னி முகுந்தன் மோடியாக நடிக்கப்போகிறார்.
“ஒரு தாயின் துணிச்சல் பல போராட்டங்களை வெல்லும்”என்கிற மோடியின் வாசகத்தை துணைத் தலைப்பாக கொண்டு மா வந்தே பல மொழிகளில் படமாகிறது.
மார்க்ஸ் சிந்தனையா ,கோல்வல்கர் கொள்கையா ? எது வெல்லும்?
–தேவிமணி












