தமிழ்த் திரை உலகத்தின் சின்னங்களில் ஏவி எம் முத்திரைக்கு தனிச்சிறப்பு இருக்கிறது. சில தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது. சிறந்த நடிகர்களை வளர்த்து விட்டிருக்கிறது. இதற்கு காரணமாக இருந்தவர்களில் ஏவி.எம்.சரவணன் முக்கியமானவர். அமைதியும் அரவணைப்பும் முக்கிய காரணமாக இருந்தாலும் உழைப்பு என்பது அடித்தளமாக இருந்திருக்கிறது.
அண்மையில் இயற்கையில் கலந்து விட்ட இவருக்கு அஞ்சலிக்கூட்டம் கூட திரைப்பட உலகம் நடத்தவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தது. உண்மையை சொல்வதென்றால் தயாரிப்பாளர்களிடையே இருந்த உள்கட்சி போட்டி தடையாக இருந்தது.
படத் திறப்பு நிகழ்வுக்கு கமல்ஹாசன் ,ரஜினி காந்த் இருவரும் வந்தாக வேண்டும். முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதால் வசதியான தேதி கிடைக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது.
தற்போது எல்லாமே கூடி வந்து விட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் வெளிநாட்டிலிருந்து வந்து விடுகிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு வந்து விடுகிறார்.ஆகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி நான்காம் தேதி சரவணன் படத்திறப்பு நிகழ்வு நடக்க இருக்கிறது .
ஏவி.எம்.நிறுவனம் சார்ந்தோர் நடத்தி வரும் பள்ளிகூட வளாகத்தில் மாலை நேரத்தில் நடக்கப் போகிறது.ஆற்காடு சாலையில் ஆவிச்சி பள்ளி இருக்கிறது.












