
அன்பு நெஞ்சங்களே, சொல்லப்படுகிற கருத்துகள் பலவகை என்றாலும் அதை பகுத்துப்பார்த்து ஆதரவு தந்து கொண்டிருக்கிற ‘சினிமா முரசம் ‘நட்புக்களே!
உங்கள் அனைவர்க்கும் எங்களின் நெஞ்சார்ந்த தமிழ்ப் புத்தாண்டு -பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் .
பாவேந்தர் பாரதிதாசனின் கர்ப்பூர வரிகளை காணிக்கையாக்கி மகிழ்கிறோம்.
தைத்திங்கள் முதல் நாள் என்றார்! தமிழர்கள் திருநாள் என்றார்!
புத்தமு தாக வந்த பொங்கல் நாள் என்றார்க் கின்றார்!
கைத்திற ஓவி யங்கள் காட்டுக வீட்டில் என்றார்!
முத்தமிழ் எழுக என்றார்! முழங்குக இசைகள் என்றார்!
கொணர்கவே புதிய செந்நெல் குன்றாக என்றார் !
பெண்கள் அணிகள், பொன் னாடை யாவும் அழகாகக் குவிக்க என்றார் !
மணமலர் கலவை கொண்டு மலைஎனக் குவிக்க என்றார்
கணுவகல் கரும்பும் தேனும் கடிதினிற் கொணர்க என்றார் !
—தேவிமணி












