சேயோன் படத்தில் கலைஞானி கமல்ஹாசன் நடிக்கிறாரா இல்லையா ?கரெக்டா சொல்லு என்று கழுத்தில் கை வைக்காத குறையாக கேட்கிறார்கள் உலகநாயகனின் ரசிகர்கள்.!
ஏற்கனவே சொன்ன நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ,சமரசத்துக்கு சற்றும் இடம் கொடாத நிலையில் ‘சினிமா முரசம்.’
விருமாண்டியாக நடிக்கிறார் உலகநாயகன் என்கிற தகவல் மறுபடியும் உறுதி செய்யப்பட்டது.
தாய்க்கிழவி இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கப்போகிற படம்தான் சேயோன் .சிவகார்த்திகேயனின் தயாரிப்பு. முக்கிய வேடம் சிவாவுக்கு.! சந்தோஷ் நாராயணின் இசை.இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ,ஆர்.மகேந்திரனின் டர்மரிக் மீடியா இரண்டும் இணைந்து தயாரிக்கின்றன.
விருமாண்டி மற்றும் முருகன் ஆகிய இரண்டு தெய்வங்களையும் கும்பிடுபவர்களைப் பற்றிய கதையே ‘சேயோன்’.எவரையும் சார்ந்து இருக்காது. தெக்கித்தி மண் மணக்க மணக்க வரப்போகிறது..
கதையில் வரப்போகும் விருமாண்டி கேரக்டரில் இருக்கும் முக்கியத்துவம் காரணமாக சிறப்புத் தோற்றத்தில் கமல் நடிக்கிறார் என்கிறார்கள். மார்க்கெட்டில் நல்ல விலை போகும் என்பதால் முன்வந்திருக்கிறார் கமல்.
படப்பிடிப்பு மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தவேண்டியிருக்கிறது.பல இடங்களில் வெளிப்புறப்படப்பிடிப்பும் இருக்கிறதாம்.
இப்போது தேர்தல் பரப்புரைகள் நடந்துகொண்டிருப்பதால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால், தேர்தல் முடிந்த பின்பு படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள்.
ஏப்ரல் 27 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கலாம்.இதற்குள் ஏனைய நடிக நடிகையர் தேர்வு முடிவாகிவிடும் என்கிறார்கள்.












