Monday, May 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

admin by admin
May 10, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் முன்னிலையில் விஜய் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.முதல்வர் விஜயை தொடர்ந்து என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ஏ. ராஜமோகன், டி.கே. பிரபு, எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை திரிஷா. விஜய்யுடன் ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘லியோ’ உள்ளிட்ட ஐந்து வெற்றிப் படங்களில் நடித்த திரிஷா, நீல நிற பட்டுப் புடவையில் பாரம்பரிய உடையில் வந்திருந்தார். வைர மற்றும் மாணிக்க கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்து தேவதை போல் காட்சியளித்தார்.

விஜய்யின் தந்தை மற்றும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்து இருந்தனர்

You might also like

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

முதல்வர் விஜய்க்கு முன்னாள் முதல்வர் முக ஸ் டாலின், பிரதமர் மோடி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவு அமைந்தது.இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (மே 10, 2026) தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து முதலமைச்சர் விஜய் இப்பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதால் திருச்சி அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

admin

admin

Related Posts

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!
News

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!

by admin
May 10, 2026
சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!
News

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

by admin
May 10, 2026
‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!
News

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

by admin
May 9, 2026
விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!
News

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

by admin
May 9, 2026
துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ஆகஸ்ட் மாதம் 2026 வெளியாகிறது!
News

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ஆகஸ்ட் மாதம் 2026 வெளியாகிறது!

by admin
May 9, 2026

Recent News

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

May 10, 2026
சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

May 10, 2026
‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

May 9, 2026
விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

May 9, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?