நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், ரவி மோகன் மனைவியை பிரிவதற்கு காரணமே தோழி கெனிஷா தான் என குற்றச்சாட்டு எழுந்து. சமூக வலைதளத்தில் கெனிஷாவை பலரும் விமர்சித்தனர். இதையடுத்து, பாடகி கெனிஷா நேற்று வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு, 4 வயதில் இருந்தே நான் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டேன், எனது பெற்றோர்கள் இருவரையும் இழந்துவிட்டேன்.18 வயதில் திருமணம், அந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கொடுமை, வயிற்றில் இருந்த குழந்தை இறப்பு என எனது வாழ்க்கையில் நான் நிறைய இழப்பை சந்தித்து இருக்கிறேன். அப்படிப்பட்டவளா ஒரு குடும்பத்தை கெடுப்பேன் என வேதனையுடன் பேசி இருந்தார்.
இந்நிலையில் தற்போது பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராமில், “நான் தேவைக்கு அதிகமாக பேசிவிட்டேன். காதலுடன் இந்த கதைக்குள் வந்தேன், இப்போது அமைதியுடன் வெளியேறுகிறேன்.சில இடங்கள் சத்தம், அகம்பாவம், தீர்ப்புகள் மற்றும் பொய்யான கதைகளால் நிரம்பி விடுகின்றன. அப்போது அங்கே நல்ல மனசுக்கும் காதலுக்கும் இடமே இருக்காது.ஒரு மனிதரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து என்னுடைய வாழ்க்கையின் பல பகுதிகளை நான் கொடுத்தேன். ஆனால் மக்கள் ஏற்கனவே ஒரு கதையை உருவாக்கி விட்டார்கள். இந்த உலகத்தில் குழப்பத்துக்கு எதிராக நல்ல மனசு நிற்க முடியாது என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.பொதுமக்கள், சினிமா துறை, விமர்சகர்கள், அவரை நேசிப்பவர்கள், வெறுப்பவர்கள், கிண்டல் செய்பவர்கள் – இப்போது அவர் (ரவிமோகன் ) முழுமையாக உங்களுடையவர்.இனி எந்த விளக்கமும் இல்லை. என்னுடையது அல்லாத போராட்டங்களை இனி சுமக்க மாட்டேன். நல்ல மனிதர்களுக்கு வாழ ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தது என் முட்டாள்தனம். ஆனால் இந்த உலகம் பொய்யர்கள், ஏமாற்றுபவர்கள் மற்றும் மனிதர்களை பயன்படுத்துபவர்களுக்கான இடம் என்பதை புரிந்து கொண்டேன்.நான் அமைதியுடனும் அன்புடனும் முழுமையான விலகலுடனும் அவரை விடுவிக்கிறேன். நான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளையும் விடுகிறேன்.உண்மையான அன்பு, விசுவாசம், மென்மை என்ன செய்ய முடியும் என்பதை உலகம் பார்க்க அனுமதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இப்போது மக்கள் உண்மையை விட உணர்ச்சியால் உருவாக்கப்பட்ட கதைகளையே நம்புகிறார்கள்.நான் இனி எதிர்த்து போராட மாட்டேன். நல்ல மனசை புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் அதை நிரூபிக்க முயற்சிக்க மாட்டேன்.நான் இனி எதிர்த்து போராட மாட்டேன். நல்ல மனசை புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் அதை நிரூபிக்க முயற்சிக்க மாட்டேன்.ஆன்லைன் அவதூறு, மனஅழுத்தம், மாயை மற்றும் தாக்குதல்களால் தான் நான் விலகுகிறேன்.இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் வெளியேறுகிறேன்.எனக்கு தேவையான தனிமையை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் வழங்க வேண்டும்.இன்றைய நிலவரப்படி பெண்ணியம் வென்றது, மகிழ்ச்சி தோற்றுவிட்டது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,












