நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வசித்து வருகிறார். இதையடுத்து விவாகரத்துக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ரவி மோகனின் வாழ்க்கையில் பின்னணி பாடகி கெனிஷா முக்கிய நபராக மாறினார். ரவி மோகன், ஆர்த்தி பிரச்னைக்குக் காரணம் கெனிஷாதான் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸில்’ கெனிஷா முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார். இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து கெனிஷா இன்ஸ்டா பதிவில், நிஜமான அன்பையும், விசுவாசத்தையும் காட்ட இந்த உலகம் எனக்கு இடம் தரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள அவர், ‘இனி ரவி மோகன் உங்கள் வசம்’ என்று கூறி அவருடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக கூறினார்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், “சாதுவா இருந்த என்னை நிறைய பேர் சீண்டலாம் என நினைக்கிறார்கள். இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன். என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. என் அப்பாவும் என் அண்ணனும் நான்கு வருடங்கள் வேலை செய்யவில்லை. இளம் வயதில் என் குடும்பத்திற்காக உழைத்தேன். என் குடும்பத்திற்காக நான் இருக்கிறேன். தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.என் குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசினாலோ சீண்டினாலோ சும்மா சும்மா இருக்க மாட்டேன்.என் குழந்தைகள் மீதான எனது பாசத்தை பற்றி கேள்வி கேட்காதீர்கள்.என் குழந்தைகளை பார்க்க விடவில்லை.என்னுடைய கடந்த வாழ்க்கையில் 14 வருடம் வாழ்ந்துள்ளேன். ஃபெமினிசம் என்றால் என்ன தெரியாதா? என் படங்களில் பெண்ணின் உரிமையை பற்றி பேசுகிறேன். நான் தப்பாக பெண்களை பேசுவேனா? என் தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. என்னுடைய பிள்ளையை நான் எப்படி விட்டுவிடுவேன். அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். ஆனால் இன்று என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. பள்ளிக்கு கூட பாதுகாவலர்கள் உடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை வேண்டாம் என தெறித்து ஓடி வந்தேன்.நான் எப்படி சூட்டிங் வர்றானு பார்க்கிறேன் என சொல்கிறார்கள். அவர்களை தயாரிப்பாளராக்கியதே நான் தான். வீட்டைவிட்டு எதுவும் இல்லாமல் வந்தவன் நான். இன்று நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். அவர்கள் கோடிக்கணக்கில் வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள்.என் குடும்பம் இப்படி கெட்டுப் போனதற்கு அந்த 3 எழுத்து இட்லி நடிகை தான் காரணம். அவர் செய்வது எல்லாம் செய்துவிட்டு தற்போது பெண்ணியம் பேசுகிறார். இப்படி எல்லாம் எப்படி தான் நடிக்க முடிகிறது என்று தெரியவில்லை
ஒரு பெண் என்னை புரிந்துகொண்டு வந்தார். இப்போது அவரையும் (கெனிஷா) மன உளைச்சலுக்கு ஆளாக்கி காலி செய்து அனுப்பிவிட்டார்கள். நான் பார்க்காத நடிகைகளா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். 45 வயதிற்கு பின்பா ஒருவன் அழகைத் தேடி ஓடுவான்? வெளியே சொல்ல முடியாத பல தானியங்கள் நடந்துள்ளது. நான் உயிருடன் இருக்க கூடாது என்பதே அவர்களது எண்ணம்.அவர்கள் எண்ணம் ஒரு நாள் நடக்கும். அதற்குள் நான் அவர்களை முடித்து விடுவேன்.நானும் தயாராக தான் இருக்கிறேன்.அவர்களை நானும் சும்மா விட மாட்டேன். என்னை பெட்டி பாம்பாக வீட்டில் வைத்திருந்தனர்.
என் பசங்களுக்காக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அப்பா அம்மா அந்த பெண் வேண்டாம் என காலில் விழுந்து கெஞ்சினார்கள். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் நான் வந்திருப்பேனா? வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். 23 வருஷம் இரவுபகலாக நான் உழைத்து இருக்கிறேன் அடுத்தவர்கள் பணத்தில் சொகுசாக வாழ் பவன் நான் இல்லை.அவர்கள் தயாரிப்பை தவிர வேறு எந்தப்படத்திலும் என்னை நடிக்க விடாமல் பார்த்து கொண்டனர். இத்தனை நாட்கள் எதுவும் பேசாமல் இருந்ததற்காக வருத்தப்படுகிறேன் இனிமேல் என்னை சீண்டி பார்ப்பவர்களை சந்திக்க தயார்.நான் கட்டிய வீட்டில் அவர்கள் வசிக்கிறார்கள் நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் என்னை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக என் பிள்ளைகளுக்கு பாடி கார்ட் போட்டுள்ளனர் இனிமேலும் என்னை பஞ்சிங் பேக்காக நினைப்பவர்களை நான் சும்மா விட போவதில்லை எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை, என் தனிப்பட்ட வாழ்க்கை என்றைக்கு சரியாகிறதோ அதுவரை நான் நடிக்கப்போவதில்லை. இதுவரை நான் நடித்த படங்களையும் வெளியிட மாட்டேன்.என்னை அடிமையாக வைத்திருந்தார்கள். கையை அறுத்துக்கொண்டு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்தார்கள். மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார். ஒருத்தர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். என்று ஆக்ரோஷமாகவும் வேதனையுடன் கண்ணீருடனும் பேசினார்.












