இந்நிலையில் தற்போது ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பாதீர்கள். அது ஒரு தாய் சிங்கமாக இருந்தால் கடவுள் காப்பாற்றட்டும். நான் கண்ணியமாக அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைக்கக் கூடாது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் கூடாது.என் குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலை வந்தால், என் கம்ஃபர்ட் ஜோனிலிருந்து வெளியே வந்து உண்மையுடன் உலகை எதிர்கொள்வேன். ஏனெனில் இறுதியில் உண்மைதான் வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவிற்கு நடிகை குஷ்பு, “ஒரு தாயுடன் எப்போதும் மோதாதீர்கள். நீ சிங்கக் குட்டிகளுடன் இருக்கும் ஒரு பெண் சிங்கம்” என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.












