எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள புதிய படம், வள்ளிமலை வேலன்.இப்படத்தில் எம் நாகரத்தினம் நாயகனாக நடிக்க, இலக்கியா நாயகியாக நடித்துள்ளார். இதில் நடிகர் முத்துக்காளை முழுநீள குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
‘நான் கடவுள்’ ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், காவிரி மகிமா, கணபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி முக்கிய திரையுலக பிரமுகர்களுக்கு திரையிடப்பட்டது.
படம் முடிந்ததும், குணசித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ள நடிகர் முத்துக்காளையை பாராட்டி, இயக்குநர் மோகன், தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான நாகரத்தினம் மற்றும் படக்குழுவினர் சால்வை அணிவித்து கவுரவித்தனர் இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ் மோகன் மேற்கொள்ள, ஏ கே ஆல்ட்ரின் இசையமைத்துள்ளார்.












