
நடனத்தில் ஹிாித்திக் ரோஷனைப் போல் வெளுத்து வாங்கியிருக்கிறாா் என்று சமீபத்தில் இதன் ட்ரைலா் வெளியீட்டு விழாவில் நடிகா் சிவகாா்த்திகேயன் இவரைப் பாராட்டியது குறிப்பிடத்த்ககது. மேலும் இவா், நடனம், நடிப்பு, காமெடி என அனைத்திலும் அசத்தியிருக்கிறாா் என கே.எஸ்.ரவிக்குமாா், பிரபுசாலமன், ஏ.எல்.விஜய, பேரரசு, துரைசெந்தி்ல்குமாா் மற்றும் பலரும் பாராட்டியுள்ளனா்.
கதாநாயகன் உமாபதிக்கு ஜோடியாக ரேஷ்மா ரத்தோா் நடிக்கிறாா். கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன், யோக்ஜேபி மற்றும் பலரும் நடித்துள்ளனா். டி.இமான் இசையமைத்திருக்கிறாா். யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறாா்.
இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக பவனி வருகிறது. குறிப்பாக ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன என்னும் பாடல் இணையதளத்தில் இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகா்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ர.இன்பசேகா் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்திற்கு பி.கே.வா்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறாா். ஜி.மதன் படத்தொகுப்பு செய்திருக்கிறாா்.
இந்த அதாகப்பட்டது மகாஜனங்களே திரைப்படம் ரம்ஜானை முன்னிட்டு சிம்பு மற்றும் ஜெயம்ரவி படங்களுடன் மோத வருகிறது.