
சின்னத்திரையுலகில், ஜோடி சேர்ந்து நடித்து , பின்னர் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேரும் நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.அந்த பட்டியலில் தற்போது இடம் பிடித்து இருப்பவர்கள் நடிகர் ஆனந்த் செல்வனும், நடிகை சியாமந்தா கிரணும் தான். கடந்த 2019-ஆம் ஆண்டு ‘ஆயுத எழுத்து’. என்ற தொலைக்காட்சி தொடரில் ஆனந்த் செல்வனும், சியாமந்தாவும் இணைந்து நடித்த போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. கடந்த 7 வருடங்களாக இருவரும் தங்களது காதலை மிகவும் ரகசியமாகவே வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், தங்களது பல வருடக் காதலை,இருவீட்டு உறவினர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் நடந்த திருமண பந்தத்தில் இணைத்துள்ளனர். நடிகர் ஆனந்த் செல்வனுக்கு தற்போது 31 வயது என்றும், நடிகை சியாமந்தா கிரணுக்கு 38 வயது என்றும் கூறப்படுகிறது. தன்னை விட 7 வயது மூத்த பெண்ணான சியாமந்தாவை ஆனந்த் செல்வன் காதலித்துத் திருமணம் செய்துள்ளதன் மூலம்
“காதலுக்கு வயது ஒரு தடையல்ல”என்பதை நிரூபித்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.
“காதலுக்கு வயது ஒரு தடையல்ல”என்பதை நிரூபித்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.












