விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது கடைசிப்பட ம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இது குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளதாவது,“ஜனநாயகன் படத்துக்கு நிறைய தடைகளை படக்குழு சந்தித்தது. ‘ஜனநாயகன்’ படம் லீக் ஆனபோது என் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் இரண்டு மூன்று முறை அழுதேன்.. எனினும், படத்தின் தயாரிப்பாளரும், விஜய் சாரும் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தனர்.
மேலும் படம் தொடர்பாக நிறைய பிரச்சினைகள் இருந்தது. தற்போது அதையெல்லாம் தாண்டி இறுதியாக படம் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்தப் படத்துக்கு அநீதி நடந்துள்ளதா,இல்லையா என்பது மக்களுக்கு தெரியும். அதற்காக அவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.இந்த படத்துக்கு சென்சார் குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது எனக்கும், படத் தயாரிப்பாளருக்கும் வருத்தம் தான். தற்போது படத்தை வெளியிடுவது தான் எங்களுடைய நோக்கம்.
முதலில் இப்படத்துக்கு யு/ஏ தான் கொடுத்தார்கள். தற்போது ‘ஏ’ கொடுத்துள்ளார்கள். அதை எதிர்க்க எங்களிடம் போதிய நேரமில்லை. விஜய் சார் மீது மக்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி சொல்ல வேண்டும்.இந்தப்படத்தை இயக்குவதற்கு பெரிய பெரிய இயக்குனர்கள் காத்திருக்கும் போது, விஜய் சார் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு பெரிதாக காரணம் ஒன்றுமில்லை. பெண்கள் எல்லா துறையிலும் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் விஜய்க்கு இருந்தது. அது இந்த கதையிலும் இருந்தது. மேலும் அவருக்கு பிடித்த பல விஷயங்கள் இதில் இருந்தது.
தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தை பாதி எடுத்துக் கொண்டு, மீதியை நல்ல அரசியல் வைத்து பேசியிருக்கிறோம். அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு என தெரிய வில்லை.சென்சாரில் பல விஷயங்கள் நடந்துள்ளது. ஆனால், ஆதாரம் இல்லாததால் வெளிப்படையாக பேச முடியவில்லை. அரசியல் லாபத்துக்காக எங்கள் மீது பழி போட்டனர்.ஜனநாயகன் லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை? என கேட்கிறார்கள்., “இப்போ இது தான் பெரிய பிரச்சினையா? நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கு இதுக்கு எதுக்கு விஜய் ட்வீட் போட்டுட்டு இருக்காரு என பேச ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், இது ஒரு சட்டப்பிரச்சினை அது தொடர்பான முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது
அதனால் விஜய் இது குறித்து பேசவேண்டிய அவசியம் எழ வில்லை.ஜனநாயகன் படத்தில் கரூர் சம்பவம் குறித்த காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.. அது வதந்தி.. இதுபோன்ற பொய் செய்தி பரப்புவார்கள் செயல் அறமற்றது. ” இவ்வாறு அவர் கூறினார். இந்தப்படத்தில் விஜயுடன் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் அனிருத் இசையமைத்துள்ளார்..இப்படம் வரும் 23 ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது….












