Sunday, August 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

விஷால் – துஷாரா விஜயன் நடிச்ச ‘மகுடம்’ படம் எப்படி இருக்கு?

admin by admin
August 15, 2026
in Reviews
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவுல அப்பா-மகன் செண்டிமெண்ட், பழிவாங்குற ஆக்‌ஷன் கதைகளையெல்லாம் நாம எத்தனையோ தடவை பார்த்திருப்போம். அந்த வரிசையில, நம்ம ஆக்டர் விஷால் அவரே ஹீரோவா நடிச்சு, ஃபர்ஸ்ட் டைம் டைரக்டராவும் அவதாரம் எடுத்து ரிலீஸ் பண்ணியிருக்கற படம்தான் இந்த ‘மகுடம்’. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தோட ஆசையும், அதுக்கு பின்னாடி வர்ற பேராபத்தும்தான் படத்தோட மெயின் ஸ்டோரி.

கதையோட ஹீரோ விஷால், ரொம்ப கம்மியான சம்பளத்துல ஒரு மெடிக்கல் ரெப்பா வேலை பார்த்துட்டு, அவரோட ஒய்ஃப் துஷாரா விஜயன் மற்றும் ரெண்டு குழந்தைகளோட ரொம்ப ஜாலியா வாழ்ந்துட்டு வர்றாரு. வருமானம் கம்மியா இருந்தாலும் அந்த சின்ன குடும்பத்துக்குள்ள சந்தோஷத்துக்கு பஞ்சமே இல்லை. இந்த டைம்லதான், தன் ஃபேமிலியை கார்ல கூட்டிட்டு போகணும்னு விஷாலுக்கு ரொம்ப நாளா இருந்த ஒரு ஆசை வெளில வருது.

You might also like

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விமர்சனம்!

‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

‘போட்டோகிராபர்’ – விமர்சனம்!

பட்ஜெட் பற்றாக்குறை காரணமா புது கார் வாங்க முடியாத அவரு, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்ல ஒரு பழைய காரை வாங்கிட்டு வீட்டுக்கு வர்றாரு. ஆனா, அந்த காரோட பாஸ்ட் ஹிஸ்டரி ரொம்ப மோசமானதுங்கிறது நம்ம ஹீரோவுக்கு தெரியல. அந்த காரோட பின்னணியில இருக்குற ஒரு பெரிய வில்லன் கேங்க் இவங்க ஃபேமிலியை அட்டாக் பண்ண, விஷாலோட கண் முன்னாடியே அவரோட ஒய்ஃபும் மகளும் கொடூரமா கொல்லப்படுறாங்க.

தன் குடும்பம் இப்படி மொத்தமா அழிஞ்சதுக்கும், தன் பொண்டாட்டி பிள்ளை கொலைக்கும் தன் சொந்த அப்பாதான் காரணம்னு விஷால் ரொம்ப ஸ்ட்ராங்கா நம்புறாரு. இதனால அவரோட அப்பா மேல இருக்குற கோபமும் வெறுப்பும் விஷாலுக்கு வெறித்தனமா அதிகமாகுது. இந்த சிச்சுவேஷன்ல, மகனை பார்க்க வர்ற அப்பாவை முகத்தைக்கூட பார்க்க புடிக்காம, பெத்த அப்பானுகூட பார்க்காம ரொம்ப கேவலமா அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு துரத்தி விடுறாரு. ஒரு மகனுக்கு தன் அப்பா மேல இந்த அளவுக்கு வெறி வர என்ன காரணம், நிஜமாலுமே அவரோட அப்பாவோட பின்னணி என்ன, தன் ஃபேமிலியை கொன்னவங்களை விஷால் எப்படி தேடிப் பிடிச்சு பழிவாங்கினாரு அப்படிங்கிற கேள்விகளுக்கு செம மசாலா பாணியில பதில் சொல்ல ட்ரை பண்ணியிருக்காரு டைரக்டர் விஷால்.

ஆனா, தமிழ் சினிமாவுல காலம் காலமா பார்த்து சலிச்சுப்போன அதே பழைய அப்பா-மகன் செண்டிமெண்ட் கதையைத்தான் விஷால் கையில எடுத்திருக்காரு. அந்த கதையையாவது கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போயிருக்கலாம். அதை விட்டுட்டு எக்கச்சக்க இழுவை, லாஜிக் இல்லாத சீன்ஸ்னு வச்சு கதையை மொத்தமா கிழிச்சு கந்தலாக்கி வச்சிருக்காரு. படத்துல அப்பா, மகன்னு ரெண்டு கேரக்டர்ல, மூணு விதமான கெட்டப்ல விஷால் வர்றாரு. ஆனா கொடுமை என்னன்னா, அவரோட மேக்கப்பும் கெட்டப்பும் ஸ்கிரீன்ல துளிகூட செட் ஆகல. மெடிக்கல் ரெப்பா வர்ற அந்த எதார்த்தமான லுக் ஓகே-னு சொல்லலாம். ஆனா அப்பா கேரக்டரோட அந்த யூத் கெட்டப்பும், வயசான கெட்டப்பும், அதுக்கு அவரு கொடுத்திருக்கற அந்த வாய்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்கவே முடியாத அளவுக்கு ரொம்ப ஆர்ட்டிஃபிஷியலா இருக்கு.

அப்பா விஷாலுக்கு ஜோடியா மீன் விக்கிற பொண்ணா அஞ்சலி நடிச்சிருக்காங்க. அவங்க பாக்குறதுக்கு அந்த லோக்கல் கேரக்டருக்கு கச்சிதமா செட் ஆனாலும், எமோஷனல் சீன்ஸ்ல எல்லாம் ஓவர் ஆக்டிங் பண்ணி செமயா வெறுப்பேத்துறாங்க. ஆனா, துஷாரா விஜயன் மட்டும் வழக்கம் போல ஒரு மிடில் கிளாஸ் குடும்பப் பொண்ணா ரொம்ப எதார்த்தமா நடிச்சு படத்துல அவங்க கேரக்டரை சூப்பரா காப்பாத்தியிருக்காங்க. இவங்களை தவிர ஜெயபிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா-னு ஒரு பெரிய ஆக்டர்ஸ் கூட்டமே படத்துல இருக்கு. ஆனா டைரக்டரோட கண்ட்ரோல் இல்லாததால, எல்லாரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு நடிச்சு சீன்ஸோட சீரியஸ்னஸை மொத்தமா காலி பண்ணிட்டாங்க. அதுவும் பல பேரை அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத கேரக்டர்ல கட்டாயப்படுத்தி திணிச்ச மாதிரிதான் ஸ்கிரீன்ல தெரியுது.

டெக்னிக்கல் சைடுல, கேமராமேன் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ரெண்டு பேரும் சண்டைக் காட்சிகளை ரொம்ப ஸ்பீடா, மாஸா காட்டியிருக்காங்க. ஆனா, 80ஸ் காலக்கட்டத்தை காட்டுற சீன்ஸ்ல மட்டும் எக்கச்சக்க கலர்ஸை அள்ளித் தெளிச்ச மாதிரி ரொம்ப ஓவரா தெரியுது. ஜி.வி.பிரகாஷோட மியூசிக்ல சாங்ஸ் எல்லாம் ஒரு கமர்ஷியல் மசாலா படத்துக்கு ஏத்த மாதிரி ஜாலியா இருக்கு. ஆக்‌ஷன் சீன்ஸோட சத்தத்துக்கும் ஆரவாரத்துக்கும் அவரோட பிஜிஎம் நல்லா சப்போர்ட் பண்ணியிருக்கு. ஆனா, எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த் எடிட்டிங் பண்ணும்போது தூங்கிட்டாரோ-னு தோணுது. ஏன்னா படத்துல வெட்டி தூக்க வேண்டிய எத்தனையோ தேவையில்லாத மொக்க சீன்ஸை அப்படியே வச்சு, படத்தோட லென்த்தை ரொம்ப அதிகமாக்கி தியேட்டர்ல இருக்குற ஆடியன்ஸோட பொறுமையை பயங்கரமா சோதிச்சிருக்காரு.

ஒரு டைரக்டரா விஷால், அவரோட இத்தனை வருஷ சினிமா எக்ஸ்பீரியன்ஸையே கொஸ்டின் மார்க் ஆக்குற அளவுக்கு இந்த படத்தை மொக்கையா ஹேண்டில் பண்ணியிருக்காரு. ஒரு கமர்ஷியல் படம்னாலும் அதை விறுவிறுப்பா கொண்டு போய் கமர்ஷியல் ரசிகர்களையாவது திருப்திப்படுத்தியிருக்கலாம். ஆனா, யாருக்கு எந்த கேரக்டர் கொடுக்கணும், காமெடி சீன்ஸை எப்படி கொண்டு போகணும்னு எந்த ஒரு பேசிக் விஷயத்துலயும் கவனம் செலுத்தாம, மூணு மணி நேரத்துக்கும் மேல படத்தை இழுத்துகிட்டே போயிருக்காரு. இதனால தியேட்டருக்கு வர்ற ஒரு சில பேரையும் தலைதெறிக்க ஓட வச்சிருக்காரு விஷால். சுருக்கமா சொல்லணும்னா, விஷால் இனிமே படம் டைரக்ஷன் பண்றதை மூட்டைகட்டி வச்சுட்டு, ஒழுங்கா ஆக்டராவே தன் ஜெர்னியை கன்டினியூ பண்ணலாம்ங்கிறதுதான் ரசிகர்களோட ஆசையா இருக்கு!

admin

admin

Related Posts

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விமர்சனம்!
Reviews

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விமர்சனம்!

by admin
August 15, 2026
‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்!
Reviews

‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

by admin
August 8, 2026
‘போட்டோகிராபர்’ – விமர்சனம்!
Reviews

‘போட்டோகிராபர்’ – விமர்சனம்!

by admin
August 8, 2026
லோகேஷ் கனகராஜின் ராவான ஆக்‌ஷன் அவதாரம்! (DC Movie Review Tamil)
Reviews

லோகேஷ் கனகராஜின் ராவான ஆக்‌ஷன் அவதாரம்! (DC Movie Review Tamil)

by admin
August 8, 2026
மாதவனின் ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் நிறை, குறை கலந்த விமர்சனப் பார்வை!
Reviews

மாதவனின் ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் நிறை, குறை கலந்த விமர்சனப் பார்வை!

by admin
August 6, 2026

Recent News

சுதந்திர தினத்தில் வெளியான  ‘ஆபரேஷன் டிரால்’ பட  ‘ஜெய் ஹோ’   பாடல்!

சுதந்திர தினத்தில் வெளியான ‘ஆபரேஷன் டிரால்’ பட ‘ஜெய் ஹோ’ பாடல்!

August 15, 2026
‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !

August 15, 2026
‘ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

‘ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 15, 2026
2 ஆம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிய ‘தர்மன்’ படக்குழு!

2 ஆம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிய ‘தர்மன்’ படக்குழு!

August 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?