Friday, October 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய ஃபீல்-குட் பயணம்?!

admin by admin
August 28, 2026
in Reviews
421 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொங்கு வட்டார வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்ட இத்திரைப்படத்தின் முதல் பாதி, நாயகன் மயில்சாமியின் பிரத்யேகமான குணாதிசயங்களையும் அவரது குடும்பச் சூழலையும் விவரிப்பதாக அமைந்துள்ளது. தாயின் மீது அதீத பாசமும், தந்தையின் மீது ஒருவித பயமும் கொண்டு வளரும் ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞனாக இக்கதாபாத்திரத்தில் நடிகர் கவின் நடித்துள்ளார்.

பெண்களுக்கு முன்னால் தனது உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல், மனதிற்குள் தாழ்வு மனப்பான்மையோடு தவிக்கும் இக்கதாபாத்திரத்தின் உளவியலை அவர் மிகவும் எதார்த்தமாகத் திரையில் பிரதிபலித்துள்ளார். சொந்த முறைப்பெண்ணாலேயே நிராகரிக்கப்பட்டு விரக்தியடையும் அவர், ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

You might also like

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!

இதே காலகட்டத்தில், தமக்கு விருப்பமில்லாத திருமண ஏற்பாட்டிலிருந்து தப்பிப்பதற்காக, நாயகி தேவயானியாக வரும் நடிகை நயன்தாராவும் தனது வீட்டை விட்டு ஓடி வருகிறார். ( யாராவது நினைவுக்கு வர்றாங்களா?)  ஆரம்பக் காட்சியிலேயே கையில் ஆயுதத்துடன் துணிச்சலாக வரும் ஒரு தைரியமான பெண்ணாக நயன்தாரா தனித்துத் தெரிகிறார். அவரது  நட்சத்திர பிம்பம் இந்தத் துணிச்சலான கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது. முற்றிலும் மாறுபட்ட குணங்களைக் கொண்ட இந்த இருவர்களும் ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

தன்னுடைய சுயநலத்துக்காக,  வேறொரு பெண்ணைக் காதலிப்பதாக  நயன்தாராவிடம் பொய் கூறும் கவின், ஒரு சூழ்நிலையில் நயன்தாராதான் தனது காதலி என்றும், அவர் தற்பொழுது கர்ப்பமாக இருக்கிறார் என்றும் ஒரு பெரிய பொய்யைக் கூறிவிடுகிறார். இந்த ஒரே ஒரு பொய்யால் இருதரப்பு குடும்பங்களிலும் மாபெரும் புயல் வீசத் தொடங்குகிறது. அவ்வாறு பொய் சொன்னதால் கவின் சந்திக்கும் நெருக்கடிகளும், அதனால் உருவாகும் பரபரப்பான திருப்பங்களுமே இத்திரைப்படத்தின் மையக் கதையாகும். சாதாரணமாக ஆரம்பிக்கும் இத்திரைக்கதை, பிற்பாதியில் யாரும் எதிர்பாராத ஒரு சுவாரசியமான சவாலை நோக்கித் திரும்புகிறது. திரைக்கதையில்  ஏற்றுக்கொள்ள முடியாத சில குறைகள் இருந்தாலும் இயக்குநர் விஷ்ணு எடவன் படத்தை சுவாரசியமாகவும் ரசிக்கும்படியும் முடித்துள்ளார்.

நயன்தாரா கர்ப்பிணிப் பெண் போல இரு வீட்டினரையும் ஏமாற்றி நடிக்கும் காட்சிகள் தியேட்டரில் கலகலப்பை ஏற்படுத்துகிறது.. கவினின் தாயாராக வரும் ராதிகா சரத்குமார், முதிர்ந்த தோற்றத்தாலும் எதார்த்தமான நடிப்பாலும் அந்தப் பாத்திரத்திற்கு முழு நியாயம் செய்துள்ளார்.

கவினின் தந்தையாக வரும் கே. பாக்யராஜ், அதிரடியான வசனங்கள் மற்றும் ஒரு சிறிய சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

நயன்தாராவின் தந்தையாக வரும் பிரபு, ஒரு குடிகாரர் பாத்திரத்தில் தனது பிரத்யேக நடிப்பால் நினைவில் நிற்கிறார். பிரபுவை விட்டுப் பிரிந்து போன அவரது மனைவி உஷா பாத்திரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரெனத் தோன்றும் சுகாசினி, ரசிகர்களுக்கு ஒரு இனிய சர்ப்ரைஸ் திருப்பமாக அமைந்து கைதட்டல் பெறுகிறார்.

கவினின் நண்பனாக வரும் ஆதித்யா கதிர், அமிர்தா சீனிவாசன், விடிவி கணேஷ், பெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர், சத்யன், குரேஷி, காவியா மற்றும் மைதிலி ஆகியோரும் தங்களது பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியுள்ளனர்.

ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு இப்படத்தின் எளிய மற்றும் எதார்த்தமான கதைக்களத்திற்குத் நேர்த்தியான கேமரா கோணங்களால்  பலம் சேர்த்துள்ளது. இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினின் பாடல்களும், காட்சிகளின் எமோஷனல் தன்மையைக் கடத்தும் பின்னணி இசையும் பலம்.

பிலோமின் ராஜின் கச்சிதமான எடிட்டிங் திரைக்கதையின் விறுவிறுப்பைத் தக்கவைத்துள்ளது. முதல் பாதியின் ஆரம்பக் காட்சிகளில் நிலவும் சில மெதுவான நகர்வுகளையும், சில இடங்களில் வரும் நாடகத்தனத்தையும் தவிர்த்துப் பார்த்தால், இந்த ‘ஹாய்’ திரைப்படம் ரசிக்கும்படி தான் இருக்கிறது.

Tags: கவின்சுகாசினிநயன்தாராபாக்யராஜ்பிரபுராதிகா
admin

admin

Related Posts

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!
Reviews

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!

by admin
October 8, 2026
‘தாய் நிலம்’ – விமர்சனம்!
News

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

by admin
October 8, 2026
‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!
Reviews

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!

by admin
October 3, 2026
‘சிக்மா’ – விமர்சனம்!
Reviews

‘சிக்மா’ – விமர்சனம்!

by admin
October 3, 2026
‘ஏழு கடல் ஏழுமலை’ – விமர்சனம்!
Reviews

‘ஏழு கடல் ஏழுமலை’ – விமர்சனம்!

by admin
October 3, 2026

Recent News

பிரபல பாலிவுட் நடிகரை நாடு கடத்த மும்பை போலீஸ் அதிரடி உத்தரவு!!

பிரபல பாலிவுட் நடிகரை நாடு கடத்த மும்பை போலீஸ் அதிரடி உத்தரவு!!

October 15, 2026
’டோரதி’  எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

October 14, 2026
உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும்  ‘ரேவன்’!

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

October 14, 2026
ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான  ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

October 14, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?