
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். சாந்தியின் கணவர் பெயர் நாராயணசாமி. இவர்களுடைய மகள் சத்தியலட்சுமி ஆவார். இவர் சசிகலாவின் உறவினர் சுதாகரனை திருமணம் செய்து கொண்டுள்ளார் சாந்தி நாராயண சாமி (வயது 72) சென்னை வளசரவாக்கம் மேற்கு காமகோடி நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனி யார் மருத்துவனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் . அவரது உடல் பொது மக்கள் பார்வைக்காக சென்னை வளசரவாக்கம் மேற்கு காமகோடி நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 1961-ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் தனது மூத்த மகள் ‘சாந்தி’யின் பெயரில், ஒரு தியேட்டரைக் கட்டினார். அன்றைய முதலமைச்சர் காமராசரால் 1961-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி இத்திரையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. குளிர்சாதன வசதியுடன் சென்னையில் தொடங்கப்பட்ட முதல் திரையரங்கம் சாந்தி திரையரங்கம் ஆகும். இதைத்தொடர்ந்து சென்னையின் முக்கிய அடையாளமாக சாந்தி திரையரங்கம் இருந்தது.குறிப்பிடத்தக்கது












