Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

என்னால் மறக்க முடியாத மனிதர் விஜய்சேதுபதி! – அட்லீ நெகிழ்ச்சி!!

admin by admin
October 6, 2026
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’.

இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர்.

You might also like

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும், வசூல் ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘பத்தா’ படக்குழுவினர் ‘சக்சஸ் மீட்’ வெற்றிச் சந்திப்பை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்

நிகழ்ச்சியில் கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ் பேசும்போது,

“இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரொம்ப பதற்றமாக இருந்தேன். இப்போது அந்தப் பதற்றம் குறைந்திருக்கிறது. இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மிகவும் நன்றி. கன்னிமா பாத்திரத்தில் என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மிகவும் நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் தயாரிப்பாளர் அட்லீ அவர்களுக்கு நன்றி. மற்ற தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினரும் தங்களது சிறந்ததைக் கொடுத்திருக்கிறார்கள். அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. படப்பிடிப்பிலிருந்து டப்பிங் வரை இயக்குநர் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து என்னிடமிருந்து வேலை வாங்கினார். அவரது பொறுமைக்கு நன்றி. விஜய் சேதுபதி சார் அவர்களைப் பார்த்தாலே எனக்குப் பயம். ஆனால் அவர் அருகில் இருப்பது ஒரு மேஜிக் போல் உணர வைக்கும். அந்த மேஜிக்கில் நானும் அருகில் இருந்தது, அதைப் பார்த்தது பெருமையாக இருக்கிறது. அவர் சக கலைஞர்களுக்கு கொடுக்கும் இடமும் சுதந்திரமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. சிறுவன் சாய் நல்ல திறமைசாலி. சஹஸ்ராவும் நன்றாக நடித்திருந்தார். ‘செல்ல மகளே’ பாடல் சாய் அப்யங்கர் இசையில் பிரமாதமாக இருந்தது. இந்தப் படம் அனைவரையும் போய்ச் சேர வேண்டும். மேலும் மேலும் பார்க்க வேண்டும். பார்த்தவர்கள் பார்க்காதவர்களிடம் கூற வேண்டும். இந்தப் படத்தை மேலும் மேலும் வெற்றிபெற உதவுங்கள்” என்றார்.

சிறுமி சஹஸ்ரா பேசும்போது,

“தேன்மொழி பாத்திரத்தில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அட்லீ சார் உட்பட அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. எனக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. விஜய் சேதுபதி அவர்களுக்கு நன்றி. நல்லதொரு உணர்வைத் தருகிற நல்லதொரு படம் இது” என்றார்.

சபரி பாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பிரித்திவி ராஜ் பேசும்போது,

“இது எனக்கு முதல் படம், முதல் பயணம். பயமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருக்கிறது. படப்பிடிப்பின் போதும் அப்படித்தான் இருந்தது. ஒரு பக்கம் பயமாகவும், இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அனைவரும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செட்டில் அங்குமிங்கும் நான் திரிந்து கொண்டிருந்தாலும், அந்த 60 நாட்களும் என்னைப் பத்திரமாக அனைவரும் கவனத்துடன் பார்த்துக் கொண்டார்கள். இயக்குநர் அழகாக நடிக்க வைத்தார். சேது சார் உடன் நடிக்கும் போது பயமாக இருந்தது. படப்பிடிப்பில் நடிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சியை முகத்தில் கொண்டு வராமல் பயந்து கொண்டே இருந்தேன். அவர் நண்பரைப் போல பழகினார். ஜாலியாக இருந்தார். சில நேரம் திட்டியிருக்கிறார். ஆனால் நன்றாகப் படிக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டே இருந்தார்” என்றார்.

இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் பேசும்போது,

“இந்தப் படத்தை நான்தான் இசையமைக்க வேண்டும் என்றபோது எனக்குப் பல விதமான உணர்வுகள் வந்தன. இந்தப் படத்தில் நடித்தவர்கள் இரண்டு மூன்று பேர் தேசிய விருது பெறுவார்கள் என்று நம்புகிறேன். வண்டி ஓட்டுபவர்கள் கூட அத்தனை அருமையாக நடித்திருந்தார்கள். யார் சிறப்பாக நடித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடித்திருந்தார்கள். முதலில் என்னை இயக்குநர் நம்பவில்லை. வேறு ஒருவரை வைத்து செய்வதாக இருந்தது. நான் ஒவ்வொரு பாடல் மூலமும் அவரிடம் நம்பிக்கை வரவைத்தேன். பிறகுதான் அவர் பின்னணி இசை அமைக்கவே சம்மதித்தார். சேது அண்ணா பிரமாதமாக நடித்திருந்தார். லிஜோ அக்காவும் சிறப்பாக நடித்திருந்தார். முதலில் கதை சொன்னபோதே அட்லீ அண்ணா என்னை நம்பினார். நானே என்னை நம்பவில்லை. ஆனால் அவர் நம்பினார். எனது இரண்டாவது படத்திற்கும் நீதான் இசையமைக்கிறாய் என்றார். அது நன்றாக வரும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசும்போது,

“இந்த வாய்ப்பு கொடுத்த மூன்று தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. என்னிடம் குறைவாக இருப்பது, அட்லீயிடம் அதிகமாக இருப்பது, அந்த நேர்நிலை எண்ணம்தான். முதலில் சேதுவிடம் கதை சொன்னேன். அவர் நண்பர் என்பதால் ஓகே செய்துவிட மாட்டார். அவருக்குப் பிடித்துப் போனதால் அட்லீயிடம் அழைத்துக் கொண்டு சென்றார். விஜய் சேதுபதியுடன் நான் இணைந்த படங்களில் உள்ள அனுபவத்தில் சொல்கிறேன். அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதை நிரூபித்தவர்.

லிஜோ மோல் மூன்று நாட்களுக்குள் படப்பிடிப்பு என்கிறபோதுதான் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் பெரிய நம்பிக்கை வந்தது. எது நடக்குமோ, அது நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது. அவர் தனது நேர்மையான பங்களிப்பை வழங்கினார். அவர் ஒரு சிறந்த நடிகை. சிறுவன் சாய் குழந்தை குணம் கொண்டவன். அவனை நடிக்க வைக்காமல் இருந்தாலே போதும். அந்தக் குழந்தைத்தன்மை சரியாக வந்தாலே சிறப்பாக அமைந்துவிடும் என்று நினைத்தேன். அப்படித்தான் வந்திருக்கிறது. சித்தாவில் வந்து பாராட்டைப் பெற்ற சிறுமி சஹஸ்ராவும் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தை நம்பினார்கள். அது படத்தில் பொறுப்பாக மாறி வெளிப்பட்டது. அதன் விளைவு சரியாக அமைந்திருக்கிறது. முத்துராஜ் என்ற அனுபவசாலி, அந்த 80s களின் உலகத்தைக் கொண்டு வருவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இப்படியே திறமையான ஒளிப்பதிவாளர், அற்புதமான எடிட்டர் என அனைவருக்கும் பங்கு உண்டு.

சாய் அப்யங்கர் முதலில் இசையமைக்க எனக்கு ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால் அந்தப் பயத்தை நீக்கி, நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு பின்னணி இசை அமைக்க வைத்தேன். அவர் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு சென்றார். அதுமட்டுமல்ல, காஸ்டியூமர் ஸ்ருதி மஞ்சரி வயதில் இளையவராக இருந்தாலும், 80s களின் உடைகளை எல்லாம் சரியாகக் கொண்டு வந்தார். டிசைனர் கோபி பிரமாதமான திறமைசாலி.
இப்படி இந்தப் படத்திற்குப் பின்னால் உழைத்தவர்கள் நிறைய பேர். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,

“எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது. பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. ஒரு படத்தை எடுத்து வந்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும்.

நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும். மகிழ்ச்சியாக வருவோம். கொண்டாட்டத்துடன் வருவோம். நீங்கள் நின்று, பாராட்டி, கை கொடுத்து, கட்டிப் பிடித்து, நடத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை தங்கள் படம் போல ஆரத்தழுவிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.

உங்களுக்குப் பிடித்து விட்டால் போதும், தூக்கிக் கொண்டு செல்வீர்கள். அது பற்றி யார் என்ன மாதிரியாகப் பேசினாலும், அதற்கு விளக்கம் கொடுப்பீர்கள். அனைத்து சமூக ஊடகங்களிலும் கொண்டு செல்வீர்கள். அப்படி அதை நீங்கள் உங்கள் படத்தைப் போலவே கொண்டாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது, நம் வாழ்க்கை வரம்தான் என்பதை நினைவுபடுத்துகிறது.

இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை. இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள் தானே? ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் உற்றுப் பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார். அதனால் நடிக்க முடியவில்லை.

சீதக்காதி, முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் சார், அமிதாப் சார், மோகன்லால் சார் போன்றவர்கள் நடிக்க வேண்டிய கதை என்றார். ஆனாலும் நான் நடித்தேன். தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட, அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும்.

இங்கு நிறைய நபர்களை அடிப்பது, இந்தக் கூட்டமாக இருப்பது, இதெல்லாம் பெரிய படங்களில் இருப்பவை. ஆனால் மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம் தான் பத்தா. இது உணர்வுகளைச் சொல்கிற படம். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சின்ன பையன் சாய் உடன் நான் சரியாக பேசவில்லை, பழகவில்லை. ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்க வேண்டும். ஒரு சகஜம் ஏற்பட்டு விட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன். அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப் படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது. அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வேன். லிஜோமோலின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. நன்றி. என் சகோதரர்கள் ஹரி, ஜோதி, விஷ்ணு, பாலா, உங்களுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். சாய் அப்யங்கர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தைப் புரிந்துகொண்டு வேலை செய்தார். இப்படி அனைவரும் இந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு பணியாற்றினார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நிறைவாகத் தயாரிப்பாளர் அட்லீ பேசும்போது,

“எப்படி இருந்தாலும், எப்படிப் பேசினாலும் குற்றம் சொல்கிறார்கள். நான் திமிர் பிடித்தவன் என்கிறார்கள். நியாயமாக இருக்க வேண்டும்; கூட இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த நேர்மை, நம்பிக்கை திமிர் என்றால் இருக்கட்டும்.

பால் கெட்டுப் போனால், தயிராகும்போது அது மதிப்பு மிக்கதாக மாறுகிறது. தயிர் கெட்டுப் போனால், நெய்யாகும்போது அது மேலும் மதிப்பு மிக்கதாக மாறுகிறது. இப்படித்தான் வாழ்க்கையிலும் சில கெட்ட அனுபவங்களால் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்வோம். கடவுள் வழி தவறவிட்டார் என்றால், அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பத்தாவின் அனுபவம்தான் இந்தப் படம்.

நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். அப்படி அதற்கு திமிர் என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.

நான் சின்ன வயதில் விஜய் சாரை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். ஷாருக்கானை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். அப்படித்தான் எனது ஒவ்வொரு கட்டமும் இருந்தது. இன்று பாலிவுட் வரை சென்று படம் இயக்கியிருக்கிறேன்.

நான் கறுப்பாக இருக்கிறேன், மதுரை பக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் சிலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால் இதைப் பற்றி நான் கண்டுகொள்ளாமல் என் பாதையில் போய்க் கொண்டே இருப்பேன்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நான் சொன்ன ஒரு சொல்லிற்காக வந்து இணைந்து கொண்ட தயாரிப்பாளர் முராத் கெதானிக்கு நன்றி.

சிலரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய் சேதுபதி அண்ணன். அவர் நல்ல மனிதர், நல்ல நடிகர் என்பதைவிட, முதலில் நல்ல மனிதர். அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி ரஜினி சார், ஷாரூக்கான் எல்லாம் பேசுகிறார்கள்.

இன்று விஜய் சேதுபதி அண்ணாவை இந்தியா முழுக்க தெரியும். அவரை நான் மேலும் மேலே கொண்டு செல்வேன். கமல் சார், விஜய் சேதுபதி அண்ணா இருவரையும் வைத்து வாய்ப்பு இருந்தால் ‘மருதநாயகம்’ படத்தினை மீண்டும் தொடங்கி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

சாய் அப்யங்கர் கடவுளின் குழந்தை. அவரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசலாம். ஆனால் நாங்கள் லண்டன் சென்றபோது, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய சுமார் 200 இசைக் கலைஞர்களையே இவரது இசைக் குறிப்புகளுக்கு வாசிக்கவைத்து, ஆச்சரியப்படுத்திக் கைதட்டல் வாங்கி வந்தவர். நான் இங்கு சொல்கிறேன், அவர் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக வளர்வார். இப்படம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், மேலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நான் மக்களைத் தேடிச் செல்கிறேன். அது குறைவானதல்ல. மக்களை நோக்கிச் செல்வது உயர்வான விஷயம்” என்றார்

Previous Post

15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய  வித்யுத் ஜம்வால்!

Next Post

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா !

admin

admin

Related Posts

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!
News

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

by admin
November 22, 2026
லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.
News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

by admin
November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!
News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
Next Post
தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா !

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா !

Recent News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?