Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

இர்ஃபான் ஜைனி நடிக்கும் மலேசியத் தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’!

admin by admin
November 20, 2026
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

ஏ.வி.எல்.டி புரொடக்‌ஷன் (AVLT PRODUCTION) சார்பில் | ஜெகன் ஜான் பீட்டர் (Jegen John Peter) தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’. புலனாய்வு க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார். 
முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த தமிழ்ப்படம் விரைவில் தமிழகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. ‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் HAVEN PICTURES   RK. கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத்  தமிழ்ப்படம் இது.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘கோட்’ திரைப்படங்களின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்ற இர்ஃபான் ஜைனி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். 
 லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ். வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி G , கலைமாமணி கே. எஸ் மணியம், நிஷா மற்றும் விஜய்  நாயுடு உள்ளிட்ட மலேசியாவைச் சேர்ந்த நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். 
மலேசியத் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் மாண்புமிகு துவான் யுனேஸ்வரன் ராமராஜ் இப்படத்தில் ‘துவான் தெய்வீகன்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பதவியில் இருக்கும் ஒரு துணை அமைச்சர் மலேசியத் தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். தினேஷ் குமார் @ டி.கே ஒளிப்பதிவு செய்ய, ஷமேஷன் மணிமாறன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமாரே படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்.
ஒரு மாணவியின் மர்மமான கொலை, அதைச் சுற்றி ஒரு ஆசிரியர் மேல் எழும் சந்தேகம்.. தடயவியல் டிடெக்டிவ் அதிகாரி ஒருவர் உள்ளூர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறார். விசாரணையின் போக்கில் பல ரகசியங்கள் முடிச்சு முடிச்சாக அவிழ்கின்றன. உண்மையான கொலையாளி யார் எனக் கண்டுபிடிப்பதுடன் சமூகத்தின் மேலோட்டமான பிம்பத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளைத் தேடும் நீதிக்கான பயணமே இந்த ‘இரும்புத் தோட்டம்’.
படம் குறித்து இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமார் கூறும்போது, “நவீன சமூகத்திலும் கூட பேசத் தயங்கும் விஷயங்களைச் சுற்றியுள்ள மவுனத்தை உடைப்பதே ‘இரும்புத் தோட்டம்’ படத்தின் மூலம் எனது நோக்கமாக இருந்தது. குற்றப் புலனாய்வுத் திரைப்படங்களின் தீவிர ரசிகன் என்ற முறையில், இந்தக் கடினமான சமூக யதார்த்தங்களைப் பேசுவதற்குப் புலனாய்வு வகையின் விறுவிறுப்பையும் பதற்றத்தையும் ஒரு பாலமாகப் பயன்படுத்த விரும்பினேன்.
 கதாபாத்திரங்கள் மற்றும் சூழல் அனைத்தும் எனது சிறுவயது நினைவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதுடன், எனது சொந்த ஊரான மலாக்காவில் உள்ள டெபோங்கில் தான்  முழுப் படத்தையும் படமாக்கியுள்ளோம். சமூக விதிமுறைகள் குறித்த பார்வையாளர்களின் கண்ணோட்டத்திற்குச் சவால் விடுவது போல இப்படம் இருக்கும்” என்கிறார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரும் விதமாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
Previous Post

ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RaPo23 !

Next Post

‘தேவா’வின் குரலில் உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடல் !

admin

admin

Related Posts

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!
News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!
News

‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

by admin
November 21, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!
News

சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

by admin
November 21, 2026
Next Post
‘தேவா’வின் குரலில்   உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடல் !

'தேவா'வின் குரலில் உருவான 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடல் !

Recent News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026
‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 21, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?