Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home INTERVIEW

கவர்ச்சியாக நடிச்சா என்ன தப்பு?

எங்கதான் 'அட்ஜஸ்ட்மென்ட் ' இல்ல?

admin by admin
June 15, 2018
in INTERVIEW
445 5
0
622
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்

திரையுலகில் நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .

என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!

கடவுளின் தேசத்துக் கொடை.கடைக்குட்டிச்சிங்கம் படத்தில் ‘கனமான’ரோல். தட்டுத்தடுமாறினாலும் தமிழ் நன்றாகவே பேசுகிறார், அவர் பெயர் அர்த்தனா.
தொண்டன் மூலம் அறிமுகமாகி செம படத்தின் வழியாக கோடம்பாக்கத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார்,
உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? 
சின்ன வயசிலிருந்தே நடிப்பு  பிடிச்ச விசயம். அப்பா அம்மா நான் எல்லாரும் திருவனந்தபுரம் தான். படிச்சது எல்லாமே அங்கதான். நான் அப்பா அம்மா செல்லம். சின்ன வயசு ஸ்கூல் படிக்கும் போதே டிராமா, கல்ச்சுரல் எல்லாதிலும் நடிப்பேன். ஸ்கூல் முடிக்கும்போதே நான் டீவியில் தொகுப்பாளராக  பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
காலேஜ்ல விஸ்காம் முடிச்ச பின்னாடி ஒரு மலையாளப்படத்துல  சுரேஷ் கோபி சார் கசினுக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதற்குப்பிறகு  ஒரு தெலுங்குப்படம் பண்ணினேன். அப்புறம் தான் சமுத்திரகனி சார் மூலமா தொண்டன் படம் வாய்ப்பு கிடைத்தது.
இப்ப தமிழில் மூணு படங்கள் பண்ணிட்டேன்.
மூன்று மொழிகளில் படம் பண்ணிட்டீங்க எந்த இண்டஸ்டரி உங்களுக்கு பிடிச்சிருக்கு ? 
அப்படி எதுவும் இல்லை. நானே ரொம்ப சின்னப் பொண்ணு. சினிமாவுக்கு புதுசு. என்ன மாட்டி விடாதீங்க..
. நான் தமிழ்ல தான் மூணுபடம் பண்ணிருக்கேன். மத்த மொழில ஒரு படம் தான் பண்ணிருக்கேன். தமிழ்தான் எனக்கு நெருக்கம்.
செம பட அனுபவம் எப்படி இருந்தது ? ஜீ.வி.பிரகாஷுடன்  நடித்த அனுபவம்  ? 
ஜி.வி.பிரகாஷ் ரொம்ப நல்ல மனிதர் ஒரு பெரிய நடிகர் போல இல்ல நல்ல பேசினாரு நிறைய எங்கரேஜ் பண்ணாரு. நிறைய அனுபவம்  செம படத்துல நிறைய புடிச்சியிருந்துச்சி ஷூட்டிங் பண்ண இடம் மாட்டு வண்டிஇப்படி  நிறைய சொல்லலாம். உண்மையா சொல்லனும்னா செம எனக்கு மூணாவது படம். வெண்ணிலா கபடி குழு 2 ல தான் முதல்ல கமிட் ஆனேன். அந்த படம் இப்ப ரிலீஸ்க்கு ரெடியா இருக்கு.
  செம படம் என்ன நிறைய இடத்துக்கு கொண்டு போயிருக்கு. செம படம்  மூலமா கிடைச்ச வாய்ப்புதான் கடைக்குட்டி சிங்கம் அதுல நான் மூணு ஹிரோயின்ல ஒருத்தரா பண்றேன்.
கடைக்குட்டிச் சிங்கம்ல என்ன ரோல் பண்றீங்க ? அந்தப்படம் எப்படி வந்திருக்கு ? 
ஷூட்டிங் முழுக்க முடிஞ்சிடிச்சு அதில மூணு ஹிரோயின் நடிச்சிருக்கோம். நானும் ஒரு கேரக்டர். இது முழுக்க கிராமத்துல வாழுற ஒரு குடும்பத்த பத்தின கதை. ரொம்ப நாளுக்கு அப்புறம் குடும்ப பிரச்சனைகள பேசுற படமா, குடும்பத்தோடு பாக்குற படமா இது இருக்கும். பாண்டிராஜ் சாரோட பசங்க பட மாதிரி ஒரு எமோசனல் டிராவல் இதுல இருக்கும்.  படத்துல நான் கிராமத்து பெண்ணா நடிக்கிறேன். இப்போதைக்கு இது மட்டும் சொல்லத்தான் அனுமதி. படம் வர்றப்ப இன்னும் நிறைய பேசலாம்.
படத்தில் மூணு ஹிரோயின். ஈகோ, சண்டைகள் எதுவும் வரலையா ? 
எனக்கு எப்பவும் வராது, யார் என்ன பண்ணினாலும் நம்ம வேலையை கரைக்ட்டா பண்ணிட்டா எந்தப்பிரச்சனையும் இல்ல. நான் ரொம்ப அமைதி. எனக்கு எப்பவும் ஒரு நல்ல நடிகையா பேர் எடுக்கனும். எமோசனல்  கேரக்டர் பண்ற நடிகைன்னு பேர் எடுத்தா போதும். அது மாதிரி ஹிரோயினா நான் பண்ணனும்னுகிறதுதான் என்னோட ஆசை. இப்ப ஈகோ, சண்டைனு என்ன மாட்டி விடாதீங்க..
உங்களுடைய கனவு ரோல் , கேரக்டர்  எதுவும் இருக்கா ? 
நிறைய இருக்கு. எத சொல்றது. எல்லாமே சொல்லலாமா?. நான் புதுசு. நான் சொன்னா ரொம்ப பெரிசா தெரியும். எனக்கு சோசியல் கருத்துக்கள் பத்தி பேசற படத்துல நடிக்கனும். ஒரு பயாக்கிராஃபி படத்தில நடிக்கனும்.  ஒரு வரலாற்றுப்ப்டத்தில் நடிக்கனும். அப்புறம் ரொம்ப நாள் ஆசை மனநலம் பத்தி நிறைய பேசுற அத சரியா அணுகுற ஒருபடத்தில கண்டிப்பா ஒரு ரோல் பண்ணனும். இன்னும் சொல்லிக்கிட்டே இருப்பேன். இப்போதைக்கு இது போதுமே!
சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்மெண்ட் பத்தி இப்போ வெளிப்படையா பெண்கள் பேசுறாங்க, அதப்பத்தி உங்களுடைய கருத்து என்ன ? 
ஆமா. வெளிப்படையா பேசப்படுறதே நல்லது தானே!. இது இந்தத்துறையில் மட்டும் இல்ல. எல்லாத்துறையிலும் இருக்கு. எனக்கு இது வரை இந்த மாதிரி நடந்ததில்லை. அதற்காக இது சினிமாவில் கிடையாதுனு சொல்லல. இருக்கலாம். பெண்கள் வெளியில் வரும்போது இந்த மாதிரி நடப்பது வருத்தம் தான். ஆனால் உங்கள் சம்மதம் இல்லாம உங்கள யாரும் எதுவும் பண்ணிட முடியாது. எப்படி நோ சொல்வது என்பது எனக்குத் தெரியும். மறுக்க தெரிந்தால் போதும் இதைத் தவிர்க்க முடியும். நோ சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். இதைத்தாண்டித்தான் பெண்கள் முன்னேற வேண்டும். 
 இதுவரை நடித்த படங்கள் எல்லாமே  குடும்பப் பெண்தான்! . கவர்ச்சியாக,  மாடர்ன் பெண்ணாக நடிப்பீங்களா ? 
எனக்கே ஒரே மாதிரி ரோல் பண்ணுவது போல் தான் இருக்கிறது. இதில் மாட்டிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து மாறி நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. மாடர்ன்  பண்ண நான் ரெடி. கவர்ச்சி என்பது பார்ப்பவரை பொருத்தது. நான் எனக்கு செட்டாகிற உடைகள் போட்டு நடிப்பதில் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் ரெடி.
வெண்ணிலா கபடி குழு, கடைக்குட்டி சிங்கம் இரண்டும் ரிலீஸிக்கு ரெடி. இப்ப அடுத்து ரெண்டு படங்கள் பேசிட்டு இருக்கேன். இதைத்தவைர மலையாளப்படமும் பேசிக்கிட்டு இருக்காங்க.. கூடிய சீக்கிரம் சொல்றேன்..” என்கிறார்.
                                                           
admin

admin

Related Posts

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை  தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்
INTERVIEW

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்

by admin
June 23, 2026
திரையுலகில்  நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .
INTERVIEW

திரையுலகில் நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .

by admin
August 22, 2025
என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!
INTERVIEW

என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!

by admin
August 22, 2025
நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி
INTERVIEW

நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி

by admin
August 22, 2025
தீபாவளிக்கு சர்தார் ; சந்தோஷமாயிருக்கு! கார்த்தி சுவாரசிய தகவல் !!
INTERVIEW

தீபாவளிக்கு சர்தார் ; சந்தோஷமாயிருக்கு! கார்த்தி சுவாரசிய தகவல் !!

by admin
August 22, 2025

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?