தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று இரவு கவலைக்கிடமானது. இதனால், நள்ளிரவில் அவரை ஆம்புலன்ஸ் வேனில் காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சற்று நேரத்தில் கருணாநிதியின் உடலில் ரத்த அழுத்தம் சீராகத் தொடங்கியது. தற்போது கருணாநிதி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.இந்த நிலையில், காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதிக்கு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், கருணாநிதியின் உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது. கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கருணாநிதிக்கு ஏற்பட்ட காய்ச்சல், நோய் தொற்று நல்ல நிலையில் குறைந்து கொண்டு வருவதாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறினார்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையில் குழுமியிருந்த பத்திரிகையாளர்களிடம் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியதாவது,, “கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அங்கு நடந்த மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் ரத்த அழுத்தம் குறைந்து, அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார்” என்று கூறினார்.












