2026 சட்டமன்ற தேர்தலின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள், துணைத்தலைவர்கள் திரு. மௌரியா IPS (ஓய்வு) அவர்கள், திரு. R.தங்கவேலு அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் திரு. தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பு நிறைவடைந்தபின், நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் “தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பலம், எந்த விதத்தில் உதவியாக இருக்கும் என்பதற்கான தரவுகளை வழங்கிவுள்ளோம். மேலும் அடுத்தடுத்த சந்திப்புகள் நிறைவடைந்தபின், இறுதி முடிவுகள் வெளியிடப்படும்” என்று கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் தெரிவித்தார்.












