
காமச்சாமியார்கள் அருளுரை என்றால் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் பக்தாஸ்!
சற்று காஜல் மாதாஜி சொல்வதையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள். மடம் ஆரம்பிக்கும் அளவுக்கு காஜலுக்கு தத்துவம் பொங்கி வருகிறது. கோபத்தைப் பற்றி அவர் ஆராய்ந்து சொல்லியிருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் ஒரு தத்துவமேதையாகி சொல்லி இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
இதோ …கேளுங்கள்.!
“மனிதனின் குணம் கோபப்படுவது. அது இயல்பு.!கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதை மறந்து விட்டீர்களா?
புரொபஷனல், பெர்சனல் இரண்டிலும் கோபம் வரும்.
ஒருவரின் கோபம் அடுத்தவரை பாதிக்கும்.
கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் முயற்சிக்கவேண்டும்.
கோபம் சில நேரங்களில் நமக்கு நன்மை செய்யும் என்பதும் உண்மை.!
தவறான முடிவுகள் எடுத்துவிட்டு அதனால் வரும் கோபத்தை யாரிடம் காட்ட முடியும்?
முண்டம் என நம் மீதே கோபப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அது நமது,பலவீனத்தையும் காட்டும்.பலத்தையும் காட்டும்!
மங்களம் உண்டாகட்டும்!”












