ஒரு சினிமாவுக்கான கதையை விட, அதை இயக்கிய இயக்குநரின் நிஜ வாழ்க்கைக் கதை இவ்வளவு பரபரப்பாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குநர் தயாள் பத்மநாபன் பகிர்ந்துகொண்ட ஒரு உண்மைச் சம்பவம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர வைத்துள்ளது.என்ன நடந்தது?
இயக்குநர் தயாள் பத்மநாபன் பகிர்ந்துகொண்டதவது.,
“நான் பல நாட்கள் ரத்தம் சிந்தி, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தில் ஒரு கீபோர்டு வாங்கியிருந்தேன். ஆனால், ஒரு நாள் ஒரு ஏரியா ரௌடி, என் கண் முன்னாடியே அந்த கீபோர்டைத் தூக்கிட்டுப் போயிட்டான். வறுமை ஒரு பக்கம், உழைப்பு வீணான கோபம் மறுபக்கம்… அந்த வெறியில் அந்தப் பெரிய கொலைகார ரௌடியையே கொலை செய்ய நான் பிளான் பண்ணுனேன்,” என்று மேடையில் ஓப்பனாகப் பேசி அதிரவைத்தார் இயக்குநர்.
தூக்கு தண்டனை தீர்வுதானா? தன் வாழ்வில் சந்தித்த அந்த மரணக் கோபத்தையும், குற்றவாளிகளின் பின்னணியில் இருக்கும் உளவியலையும் தான் அவர் ‘லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ படமாக மாற்றியுள்ளார்.

“சூழ்நிலையால் ஒருவன் கொலையாளி ஆகும் போது, அவனுக்குத் தூக்கு தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்ற பவர்புல் கேள்வியை இப்படம் முன்வைக்கிறது.கோர்ட் சீன்களில் அனல் பறக்கும்!படத்தில் வாதம், பிரதிவாதம் இரண்டுமே எந்த ஒரு சார்பும் இல்லாமல், நடுநிலையாக செதுக்கப்பட்டிருக்கிறதாம். நீதிமன்றக் கூண்டில் நடக்கும் இந்த த்ரில்லிங்கான விவாதங்கள், தியேட்டரில் ரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு வரும் என்று படக்குழுவினர் கெத்தாகக் கூறுகிறார்கள்.
‘2எம் சினிமாஸ்’ சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. வெற்றி, பிரிகிடா சகா, கவிதா பாரதி, ரங்கராஜ் பாண்டே, சுப.வீரபாண்டியன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். தர்புகா சிவாவின் இசையும், எம்.வி.பன்னீர் செல்வத்தின் கேமராவும் படத்திற்குப் பெரிய பலம்.நிஜ சம்பவத்தின் பாதிப்போடு, கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகியிருக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ தியேட்டரில் சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது!












