
இப்போதெல்லாம் ரசிகர்கள் முன்னைப் போலில்லை.
படம் வருவதற்கு முன்னர் வாராவாரம் சம்பந்தமான செய்திகளை அல்லது படங்களையாவது வெளியிடுங்கப்பா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
குறிப்பாக உச்ச நடிகர்களின் ரசிகர்கள் விட்டால் சென்னைக்கே வந்து ஆபீஸ் முன்பாக உட்கார்ந்து அப்டேட் கேட்பார்கள் போலிருக்கிறது.
நல்ல முன்னேற்றம்தான்.
தீபாவளிக்கு எதிர்பார்த்த உச்ச நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே. வராமல் போனதால் ஆர்வம் முற்றி கோபத்தின் எல்லைக்குப் போய்விட்டார்கள் ரசிகர்கள். இயக்குநர் செல்வராகவனின் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்.
நல்ல வேளை, ரசிகர்கள் நெற்றிக் கண்களை திறப்பதற்கு முன்னர் உஷாராகிவிட்டார் செல்வராகவன்.
“அன்பார்ந்த ரசிகர்களுக்கு தாழ்மையான கோரிக்கை. நாங்கள் அமைதியாக ஆனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்.ஜி.கே.யின் அப்டேட்களை சரியான நேரத்தில் கொடுப்போம். மூன்று நாளைக்கு ஒரு முறையோ வாராவாரமோ,கொடுக்கவோ இயலவில்லை.உங்களின் ஆதரவுதான் எங்களுக்கு வலிமை.நாங்கள் கடுமையுடன் உழைக்க உங்களின் ஒத்துழைப்புத் தேவை.”என செல்வராகவன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.












