
பல விழுதுகள் வேர் பிடித்து பருத்த ஆலமரமாக பரந்து விரிந்து கிடப்பதைப் பார்த்த ஒரு மரங்கொத்திப் பறவை உன்னை வீழ்த்திக் காட்டுகிறேன் பார் எனச் சொல்லி சுற்றிச்சுற்றி வந்தது.
அடி மரத்தை கொத்தி சாய்க்கப் பார்த்த அந்த சிறு குருவியின் மூக்கு முனைதான் முறிந்தது.
ஆலமரம் அதைப் பார்த்து வருத்தப் பட்டது.வேறென்ன செய்ய முடியும்?
அதை போல கவிப்பேரரசுவின் மீது கல்லெறிந்தவர்கள் கை ஓய்ந்ததுதான் கண்ட பலன்.
இதோ இயக்குநர் பாலாவின் ‘வர்மா’படத்துக்கு அவர் எழுதிய பாடல் வரிகள்.!
“வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை- இந்த
வாழ்வோடும் இறுதி இல்லை.
நீ சிறகானால்-இந்த
வான்பெரிதில்லை.
உள்ளமே எழுக
உயரம் தொடுக.
நேற்றை இன்றை எருவாக்க வா,
நாளை ஒன்றை உருவாக்க வா.
சேறேன்றால் -நீ பூவாயிரு.
கடலென்றால் -நீ தீவாயிரு.
ஏய்!
உளிபட்ட மலைதான் சிலையாகும்
உடைபட்ட விதைதான் மரமாகும்.
நடந்ததை மறந்திடு
கவலைகள் மாறும்.
ஒரு முற்றுப்புள்ளி உண்டு
வாக்கியத்தில்-எந்த
வாழ்க்கையும்
முற்றுப்புள்ளி பெறுவதில்லை.
இலை வீழ்ந்து போனபின்னும்
கிளை தீர்ந்து போவதில்லை.
உள்ளமே எழுக,உயரம் தொடுக.
நேற்றை இன்றை எருவாக்க வா
நாளை ஒன்றை உருவாக்க வா.












