
மே 17 இயக்கத்தலைவர் திரு முருகன் காந்தி,இயக்குநர்கள் மிஸ்கின், வசந்த பாலன் ,இவர்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்றால் எஸ்.பிராஞ்சுக்கு என்ன வேலை?
திருமுருகன்காந்தி இருக்காரே ,அவருக்காக வந்தாகனுமே! வந்தார்கள். வழக்கம் போல கூட்டமுடன் கூட்டமாக கலந்து விட்டார்கள்.
படத்தின் பெயர்’பொதுநலன் கருதி’.என்றாலும் தலைப்புக்கு மேலாக “சமூக விரோதிகள் விற்பனைக்கு” என்கிற கொக்கியும் தொங்கியது.
வெயில் வசந்தபாலன் மைக் முன் நின்ற பிறகுதான் பத்திரிகையாளர்கள் சிலரின் பேனா திறந்தது.
“பொதுநலன் கருதி என டைட்டில் சொன்னாலும் நான் சுயநலன் கருதிதான் பேச வந்தேன்” என காரணத்தை விளக்க ஆரம்பித்தார். பெருவியாதிக்கு மருந்து இல்லை. சிறு படத்தயாரிப்பாளர்களுக்கு விடியல் இல்லை என்பதைப்போல தயாரிப்பாளர் சங்கத்தை நாலு இழு இழுத்தார் .!
“தமிழ் ராக்கர்சை ஒழிப்போம்னு சொல்லித்தானே பதவிக்கு வந்தீங்க. ஒழிச்சீங்களா?இல்ல கண்டு பிடிச்சும் சும்மா இருக்கீங்களா? மலையாளம் தெலுங்கு இங்கெல்லாம் ராக்கர்ஸ் இல்ல.தமிழ் படங்களுக்கு மட்டும் ராக்கர்ஸ் வந்தது எப்படி?”என்று பெரிய கேள்வியை கேட்டு விட்டு அமர்ந்தார்.
“தமிழ் ராக்கர்சை பிடிப்பதற்காக நாலு மாதம் ராப்பகலாக அன்னம் தண்ணி இல்லாம கஷ்டப்பட்டது எனக்குத் தெரியும் வசந்த பாலன்”என சங்கம் சார்பாக சிறு விளக்கம் தந்துவிட்டு மிஸ்கின் பேசத் தொடங்கினார்.
” விஞ்ஞான வளர்ச்சி அதை ஒண்ணுமே செய்ய முடியாது.”என்று வ.பாலனின் மண்டையில் ஆணியையும் இறக்கிவிட்டார் மனிதர்.
“மோசமான படங்கள் எடுக்கிறவங்களுக்குத்தான் கார் பங்களா வசதி வேணும்.நம்ம மாதிரி உண்மையா படம் எடுக்கிறவங்களுக்கு ஒரு டீ ,பன் போதும் என்றார்.
“சாதனைக்களம் அல்ல சினிமா,அது கதை சொல்லும் இடம்.பொய்கள் வழியாக மயக்கச்செய்கிறோம்.அதனால்தான் ஒரு ஹீரோவினால் 200 பேரை அடிக்க முடிகிறது.”என்ற மிஸ்கினுக்கு “சொர்க்கத்தில் கக்கூஸ் இருக்கா?” என்பதுதான் மிகப்பெரிய சந்தேகமாக இருக்கிறது. ஆன்மீகர்கள் யாராவது தீர்த்து வையுங்களேன். படத்தின் இயக்குநர் சீயோன் தனது குறையையும் சொல்லி வைத்தார்.
“படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிற (காமடி) கருணாகரன் டப்பிங் பேசுவதற்கு முன்னதாகவே மொத்த பணத்தையும் வாங்கி விட்டார். ஆனால் படத்தின் புரமொஷனுக்கு வரவில்லை”என்கிற குற்றச்சாட்டை பதிவு செய்தார்.
தளபதி விஜய்யின் முன்னாள் மானேஜர்,தயாரிப்பாளர்,பி.ஆர்.ஓ . பி.டி.செல்வ குமார் பொங்கியதுதான் சபைக்கே விருந்தாகியது.
“என்னை சினிமாவை விட்டு விரட்டி விடுவார்களாம். நான் பொருளாதாரத்தில் தங்கப்பதக்கம் வாங்கியவன்.ரியல் எஸ்டேட் பண்ணியாவது பிழைத்துக் கொள்ளமுடியும் .என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது”என மேலும் பல விஷயங்களை பூடகமாக சொல்லிவிட்டு அமர்ந்து விட்டார்.
!












