Tuesday, June 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

admin by admin
June 16, 2026
in News
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

You might also like

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், டி. சிவா , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசுகையில்,

”டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை பார்த்துவிட்டு.. இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த ‘டார்க்’ திரைப்படம் இருக்கும்.
இந்த வருடத்தில் தமிழ் சினிமாவிலிருந்து பத்து முதல் பதினைந்து ஹீரோக்கள் உருவாகிறார்கள். அதில் ஒரு முக்கியமான இடத்தில் இப்படத்தின் ஹீரோவான அஜய் இருப்பார்.

இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை நாங்கள் படத்தின் புரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருநாள் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் உடன் பயணிக்கும் போது, அவர் என்னிடம் உங்களின் ஆசை என்ன என கேட்டபோது, நான் சினிமாவில் தயாரிப்பாளராக வேண்டும் என சொன்னேன். உடனடியாக அவர் எழுதிக் கொடுத்த கதை தான் ‘டார்க்’. இப்படத்தின் மூலம் என்னை தயாரிப்பாளராக உயர்த்தியவர் இயக்குநர் கணேஷ். அவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் ரியோ பேசுகையில்,

”டார்க் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. பொதுவாக சைக்காலஜிகல் திரில்லர் படங்களுக்கு என ரசிகர்கள் உள்ளனர் என்பார்கள். ஆனால் என்னுடைய ஒப்பினியன் வேறு. இது போன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படங்களுக்கென ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். பயந்து பயந்து ஒரு படத்தை பார்ப்பது ஒரு குடும்பத்திற்கே பிடிக்கும். அதற்கான மொமென்ட்ஸ் ட்ரெய்லரில் இருந்தது. ரீசன்டா ‘அப்சஷன்’ என்ற ஒரு பத்து கோடியில் எடுத்த படம், 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இது போன்றதொரு படங்கள் வராதா என்ற ஏக்கம் நமக்கும் இருக்கும். அந்த வகையில் ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் ‘டார்க்’ படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

‘டாடா’ படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை பார்த்தவர் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு. இந்தப் படத்தில் அவர் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அதுவும் அவருடைய திறமைக்கு பொருத்தமானது தான். தயாரிப்பாளராகவும் அவர் மிகப்பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில்,

”டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபு என்னிடம் வந்து கதை சொன்னார். நான் ஃபேமிலி சென்டிமென்ட் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் ‘டார்க்’ படத்தின் கதையை சொன்னார். கேட்டதும் இப்படத்தின் ஹீரோ யார் ? என்று கேட்டேன். அஜய் கார்த்தி நடிக்கிறார் என்றார். இந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்து விடுவாரா..? புதுமுகமாச்சே..! என்று கேட்டேன். ஆனால் இப்படத்தினை டப்பிங் செய்யும் போது பார்த்தேன். அஜய் கார்த்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஃபைவ் ஸ்டார் செந்தில் கமர்சியல் படங்களை வெளியிட்டாலும், கன்டென்ட் உள்ள படங்களையும் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றி. இப்படத்தினை திரையில் பார்த்தபோது குழுவினரின் உழைப்பை தெரிந்து கொண்டேன். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில்,

”அஜய் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது. இதன் ட்ரெய்லர் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. திரையில் அவரது லுக் அண்ட் பிரசன்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது. இந்தப் படம் திரில்லராக இருப்பதால் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உருவான பாடல் நன்றாக இருந்தது. இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகி இருக்கிறார் நண்பர் கணேஷ் கே பாபு. தற்போது நிறைய படங்களை தயாரிக்கிறார். தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமான விஷயம்.

நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் ரிஸ்க் அதிகம். இது சாதாரண விஷயமும் அல்ல. படத்தை தயாரிப்பது என்பது எளிதானது அல்ல. கதையை நம்பி முதலீடு செய்து அந்த பணம் திரும்ப வருமா… வராதா… என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதிலும் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன். எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ் திரை உலகத்திலும் சின்ன படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. ‘பிளாஸ்ட்’, ‘சிறை’ போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் செய்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அண்மையில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது.

தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்ல படங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல லாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகை அஞ்சனா நேத்ரன் பேசுகையில்,

”டார்க் படத்தின் மூலம் நான் அறிமுகமாகிறேன். முதல் படத்திலேயே கே பாக்யராஜ், நட்டி நட்ராஜ், வி.டி.வி கணேஷ் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறேன். ஹீரோ அஜய் கார்த்திக் கடும் உழைப்பாளி. மிகவும் இனிமையானவர். அப்பாவி. என்னைவிட அவர் ரொம்ப அப்பாவி. அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.
என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. என்னுடைய அடுத்த பட வாய்ப்பையும் தயாரிப்பாளர் கணேஷ் பாபு வழங்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்,” என்றார்.

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில்,

”டார்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது. அதிலும் விஷுவல்ஸ் அட்டகாசமாக இருந்தது. எழுத்து நன்றாக இருக்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். அஜய் கார்த்தி இந்த படத்தில் நன்றாக வேற லெவலில் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகிற்கு நல்லதொரு நடிகர் கிடைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் நியூ சாக்லேட் பாய். அவருடைய சிரிப்பு.. கவர்ச்சிகரமானதாக இருக்கும். நட்டி நட்ராஜ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.” என்றார்.

நடிகர் அஜய் கார்த்தி பேசுகையில்,

”இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மேடை. டார்க் ஒரு படம் என்பதை கடந்து எனக்கு ஒரு பாடம் என்றும் சொல்லலாம். ‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே பாபு வேறொரு பிரபலமான நடிகரை வைத்து படம் இயக்கியிருக்கலாம். ஆனால் இது போன்றதொரு எக்ஸ்பிரிமென்டல் படத்தை புது முகங்களை நம்பி தயாரிக்க முன் வந்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

இயக்குநர் கல்யாண் கே. ஜெகனுடன் மூன்றாண்டுகளாக பயணித்திருக்கிறேன். அவருடைய சமயோஜித புத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு தளங்களில் எத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் தன்னுடைய திறமையால் சீர் செய்து பட குழுவினருக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்க கூடியவர். எதற்கும் டென்ஷன் ஆகவே மாட்டார்.

படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய சின்ன சின்ன அசைவுகளையும் துல்லியமாக கவனித்து அதனை எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற விசயங்களை நட்டி நட்ராஜ் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை எனக்கு உற்சாகத்தை அளித்தது.
டார்க் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது. தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு புது வகையான அனுபவத்தை வழங்க வேண்டும். அடுத்து என்ன? என்பதை யூகித்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து ,இதனை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். பார்த்த பிறகு உங்களுடைய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் பேசுகையில்,

”எனக்கும் இது முதல் மேடை. இந்த மேடையில் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மாஸ்டர் இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு நன்றி. அவர் ஒரு குறும்படத்தில் நடித்த போது என்னை முதல் முதலில் மானிட்டரில் பார் என்று சொன்னார். அதன் பிறகு அவருடைய தயாரிப்பில் முதல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது மிகவும் சந்தோஷம்.

தயாரிப்பாளர் மணிமாறன்- மிகவும் இன்ட்ரஸ்டிங்கான மனிதர். படத்தை வணிகம் செய்வதில் தேர்ந்தவர். இந்த படத்தில் நட்சத்திரங்களை நடிக்க வைத்ததில் அவருடைய பங்களிப்பும் உண்டு. முதல் படத்தில் இந்த இருவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே இந்தப் படம் உருவாக காரணமாகவும் இருந்தது.
இந்தப் படத்தில் அஜய் கார்த்தி தான் ஹீரோ. அவரும் புதுமுகம். நானும் புதுமுகம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்போம். அதைத்தொடர்ந்து ஹீரோயின் அஞ்சனா. அவர்களும் புதுமுகம். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக் கொண்டே எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை திரையில் செய்திருக்கிறோம்.

நட்டி நட்ராஜ் பேசும்போது..,

படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று சொன்னார். அவர் வரும்போது நாங்களே படப்பிடிப்பு தளத்தை அமைதியாக்கி விடுவோம். எங்களுடன் நீண்ட நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் அஜயை மையப்படுத்தி தான் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் சொன்னதை அவர் புரிந்து கொண்டு நடித்தார்.
இந்தப் படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

admin

admin

Related Posts

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!
News

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

by admin
June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!
News

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

by admin
June 15, 2026
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!
News

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

by admin
June 15, 2026
நெட்ஃப்ளிக்ஸில்  சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!
News

நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

by admin
June 15, 2026
ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்!
News

ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்!

by admin
June 15, 2026

Recent News

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

June 15, 2026
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

June 15, 2026
நெட்ஃப்ளிக்ஸில்  சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

June 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?