
எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் படப்பிடிப்பு.
பூவின் மணம் தேனீக்களை ஈர்க்காதா?
தளபதி விஜய் இயக்குநர் அட்லியின் படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்பது பத்திரிகை,ஊடகங்கள் சொல்லி விட்ட ரகசியம்.
ஏஜிஎஸ் நிறுவனத்தினால் எப்படி ரகசியம் காக்க முடியும்?
நேப்பியர் பாலத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் பிரசாத் லேப் காம்பவுண்டில் பாலத்தை கட்டியவர்கள் ஆச்சே!
தளபதி விஜய் வீட்டை விட்டு கிளம்பிய சற்று நேரத்தில் ரசிகர்கள் பைக் அணியும் பின் தொடர்ந்தது,
தொடர்ந்தது என்பதை விட காரின் வேகத்துக்கு இணையாக விரட்டி வந்தது என சொல்லலாம்.
எந்த வினாடியும் விபத்து நிகழலாம் என்கிற நிலை.
தனது காரை மெதுவாக செல்லும்படி சொல்லி நிறுத்தி விட்டார்.
பின்வந்தவர்களுக்கு தளபதி விஜய் அட்வைஸ்.”வேகம் விவேகம் அல்ல.”என சொல்லி விரட்டல் படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஆனால் படப்பிடிப்பு நடக்கும் எஸ்.ஆர்.எம்.கல்லூரிக்குள் நுழைந்ததும் ஸ்டூடண்ட்ஸ் பட்டாளம் திரண்டு வந்து வாழ்த்தி இருக்கிறது.












