
நாட்டையே அதிர வைத்திருக்கிறது பொள்ளாச்சி கல்லூரி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து சித்ரவதை செய்த கொடுமையை.!
வெளியான வீடியோக்களை பார்த்த பெண்கள் கதறி அழும் அளவுக்கு மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள் மாணவிகள்.!
ஏழு ஆண்டுக;ளாக நடந்திருக்கிறது இந்த கோர நிகழ்வு.
காவல் துறை கண்டு கொள்ளவில்லை? அரசியல் பின்னணி..\
கல்லூரி மாணவிகளை காதல் வலை வீசி வீழ்த்தியவன் திருநாவுக்கரசு என்கிற எம்.பி.ஏ .பட்டதாரி.வயது 25
இவனுக்கும் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமனின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி வருகிறது.
இந்த காமக்கொடூரத்தில் சபரிராஜன்,சதீஷ்,வசந்த குமார் உள்ளிட்டோர் பங்கு வகித்திருக்கிறார்கள்.
ஆளும் கட்சியின் அரசியல் செல்வாக்கினால் இவர்களின் திருவிளையாடல் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கிறது.
தனது மகனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என பொள்ளாச்சி ஜெயராமன் டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்.
எந்த காலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக காவல்துறை நடந்திருக்கிறது இப்போது மட்டும் நடவடிக்கை எடுக்க? பொள்ளாச்சி ஜெயராமன் யாரை கையை நீட்டுகிறாரோ அவர் மீது தானே சட்டத்தைப் பாய்ச்சுவார்கள்.
சத்யராஜ் என்ன சொல்கிறார் இந்த கொடுங்கோலன்களைப் பற்றி?
“அக்கிரமத்தின்,அநியாயத்தின்,கொடூரத்தின் உச்சம் இது.. இந்த மனித மிருகங்களை சட்டத்தின் உச்சபட்ச தண்டனையை தாமதமின்றி உடனே கொடுக்க வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். திருத்த முடியாது.”என்கிறார்.
சட்டத்தின் ஓட்டைகள் ,அதிகார வர்க்கத்திற்கே உரிய சாதகங்கள் இவைகளை வைத்து எப்படி உடனடியாக தண்டிக்க முடியும் என்பது தெரியவில்லை.
பா.ரஞ்சித் என்ன சொல்கிறார்.?
“பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்….நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோபத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.
இல்லையேல் பாதிக்கப்பட்ட,பாதிக்கபடப் போகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.
ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்”என்று கூறியிருக்கிறார்.
இது உடனடியாக நிகழப்போவதில்லை.!












