“பாராளுமன்றத் தேர்தல் மக்களுக்கு கிடைத்திருக்கிற கடைசி வாய்ப்பு. இந்த தேர்தல் வழியாக பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்” என்று இந்திய திரைப்பட இயக்குநர்கள் 103 பேர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோபி நயினார்,வெற்றிமாறன்,திவ்யபாரதி,சனல் குமார்,லீனா மணிமேகலை,பிரமோத் பையனூர், எம்.ஜி.சசி உள்ளிட்ட பிரபலங்கள் நமக்குத் தெரிந்த பெயர்கள்.
இந்த பட்டியலில் பாரதிராஜா, பா.ரஞ்சித் ,ஆர்.வி.உதயகுமார் போன்ற இன்னும் பலரை எதிர்பார்த்தோம். காணவில்லை.
அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை.இந்த அறிக்கையால் பிஜேபி வட்டத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டிருக்கிறது.
” வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாம் சரியாக செயல்படாமல் போனால், பாசிசம் நம்மை கடுமையாகத் தாக்கும்.
2014-ல் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.
மதரீதியாக நாடு செல்கிறது..
மாட்டு அரசியல் வழியாக நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.
பிஜேபியின் ஆட்டத்தில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஓரங்கட்டப் படுகிறார்கள்.
இணையதளம் மற்றும் சமூகவலைதளம் மூலம் அவர்களது வெறுப்பு அரசியலை பரப்புகிறார்கள். 
தேசபக்தி என்பதுதான் அவர்களின் துருப்புச் சீட்டு. யாராவது அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்களை ஆன்ட்டி நேஷனல் -தேசத்துரோகிகள் என சொல்லி இழிவு படுத்துகிறார்கள்.
இவர்களின் அதிருப்தியால், நாம் சில எழுத்தாளர்களையும் படைப்பாளர்களையும், ஊடகவியலாளர்களையும் இழந்திருக்கிறோம். மறந்துவிடக் கூடாது.
ராணுவத்தைப் பயன்படுத்துவதும் அவர்களின் திட்டங்களில் ஒன்று.
அவசியமில்லாத போர் மூலம் நாட்டை ஆபத்தில் வைத்து அதன் வழியாக அரசியல் லாபம் பெற நினைக்கிறார்கள்.
திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் சென்சார் போன்ற நடவடிக்கைகள்மூலம் மக்களுக்கு உண்மை தெரியாதபடி பார்த்துக்கொள்கிறார்கள்.
விவசாயிகளை சுத்தமாக மறந்தே விட்டார்கள். பா.ஜ.க, இந்தியாவின் வளங்களை, சொத்துகளைத் தொழிலதிபர்களுக்கு வசதியாக வழங்கி விட்டது..
மோசமான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்ட பெரும் பேரழிவுகளை, மூடிமறைக்கிறார்கள்.அந்த கொள்கைகள் வெற்றிபெற்றது போல ஜோடனை செய்கிறார்கள்.
பொய் சொல்கிறார்கள்.
வரலாறு மற்றும் புள்ளியியல்களை அவர்களுக்குத் தகுந்தாற்போல மாற்றுவார்கள்.
இன்னும் ஒருமுறை அவர்களுக்கு அதிகாரம் வழங்கினால், அது மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அடிக்கும் கடைசி ஆணியாக அது இருக்கும்.
இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வராமல் இருக்க, இந்திய அரசியலமைப்பின்படி, உங்களின் அரசாங்கத்தைத் தேர்வுசெய்யுங்கள். அந்த அரசாங்கம், நமது பேச்சுரிமையை கருத்துரிமையை வழங்குவதாக இருக்க வேண்டும்.
சத்தியமான உண்மை…. இதுவே உங்களின் கடைசி வாய்ப்பு!”












