
“என்னதான் சொல்லுங்க…பெண்கள் சுனாமி பொங்கி அடிச்சாலும் கேரள நடிகர் சங்கம் ‘அம்மா’ அசைந்து கொடுக்கவில்லை.
ஒரு நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களில் நடிகர் திலீப்பும் ஒருவர்.
நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்து அவரை நீக்கி வைத்தது. திலீப் ஜாமீனில் வந்ததும் அவரை நடிகர் சங்கம் மீண்டும் சேர்த்துக் கொண்டது.இதனால் ரேவதி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட பெண்கள் பொங்கி எழுந்து அம்மாவை ஆட்டி வைத்து விட்டார்கள்.
தற்போது நடிகர் சங்கம் தனது அடிப்படை சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறது.
உறுப்பினர்கள் மீது சாட்டப்படும் குற்றங்கள் நிரூபிக்கப்படுமானால் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். உறுப்பினர்கள் யாரும் சங்கம் பற்றிய அறிக்கைகள் பேட்டிகள் கொடுக்கக்கூடாது. என்றும் முடிவு செய்திருக்கிறது.












