Wednesday, April 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

கூர்கா .( விமர்சனம்.)

admin by admin
July 15, 2019
in Reviews
436 4
0
610
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எழுத்து இயக்கம் :சாம் ஆண்டன் ,ஒளிப்பதிவு:கிருஷ்ணன் வசந்த் ,இசை:ராஜ் ஆர்யன், வசனம்: சாம் ஆண்டன்,ரூபன்,அந்தோணி பாக்யராஜ்,ஆர்.சவரி முத்து, தயாரிப்பு: போர் மங்கிஸ் ஸ்டுடியோஸ் 

You might also like

‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!

‘ரூம் பாய்’ – விமர்சனம்!

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

யோகிபாபு, ராஜ்பரத்,எலிசா,சார்லி,ஆனந்தராஜ்,ஆடுகளம் நரேன்,ரவிமரியா,மயில்சாமி,நமோ நாராயணன்,மனோபாலா, லிவிங்க்ஸ்டன்

*******************

“முருகா! உனக்கு சுட்ட பழம் பிடிக்குமா ,சுடாத பழம் பிடிக்குமா?”

“அவ்வையே ! சுடாத பழத்தில் வளமான சத்தே இல்லை. கோடம்பாக்கத்தில் கற்பனை வரட்சி அதிகம். அதனால் சுட்ட பழத்தையே கொடு. அதில்தான் டேஸ்ட் அதிகம்.”

“கூர்கா படமும் சுட்டதுதான் முருகா!”

“மசாலா அதிகமோ?”

“நாட்டு நடப்பே மசாலாவாகி  விட்ட பிறகு சினிமாவில் இருப்பது குற்றமா முருகா?”

“இல்லைதான்! சுருங்கச்சொல்லு அவ்வையே !”

“எமதர்மனாக அவதரித்திருந்த யோகிபாபுவை இதில் கூர்க்காவாக மாற்றி இருக்கிறார்கள். “

“அப்படியா,,அவரது பம்பை தலைக்குள் கூர்கா கேப் அடங்கிவிட்டதா?”

“நல்லவேளை  போலீசாக வேண்டும் என்கிற அவருடைய ஆசை நிராசையாகிப்போனதால்தான் கூர்கா வேஷம். ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போன யோகிக்கு பக்கத்து அமெரிக்க தூதரக அதிகாரி எலிசா மீது லவ்.”

“என்ன அவ்வை இது?”

“குறிக்கிடாமல் கேள் முருகா! அந்த எலிசா ஒரு மாலில் உள்ள ஜிம்முக்கு டெய்லி போவதால் யோகியும் இடம் பெயர்கிறார். அந்த மாலுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் மந்திரி மனைவி,போலீஸ் அதிகாரிகள் மனைவிகள், ஊர் பெரியவர்கள், நாட்டை ஏமாற்றும் சாமிகள். ஆகியவர்களை வரவழைத்து கோடிகளை பணயப் பணமாக பெற தீவிரவாதக்கோஷ்டி ராஜ்பரத் முடிவு செய்கிறார். இதன் உண்மையான நோக்கம் தெரியாமல் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி துணை போகிறார். “

“ராணுவ அதிகாரியா…. என்ன பாட்டியாரே ?”

“அதான் சொல்லிவிட்டேனே உண்மையான நோக்கம் தெரியாது என்பதை! மால் முற்றுகை இடப்பட்டது. பிறகு இடையில் என்ன நடக்கும்,முடிவு எப்படி இருக்கும் என்பதெல்லாம் சொல்லத்தேவையில்லை அல்லவா?”

“சிறப்பு, மற்றும்  சிரிப்புகளை மட்டும் சொன்னால் போதும் அவ்வையே!”

“அலட்டிக்கொள்ளாமல் வசனங்களை பேசுவது யோகிபாபுவின் பலம். டைமிங் சென்ஸ்தான் அவரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் ரஜினியின் “உயிர்மேல எவனுக்காவது ஆசை இருந்தா அப்படியே ஓடிப்போயிடு .வாய் வலிக்குதுடா!”என சொல்ல முடிகிறது.”நடிகர் சங்க விஷாலே வந்தாலும் காப்பாத்த முடியாதுடா “என நக்கலடிக்க முடிகிறது.!

“ஓ..அந்த அளவுக்கு காரமா? பக்தியின் பெயரால் போலி வேசமிடும் நித்திகளை, அரசியல் தலைவர்களை  கூவத்தில் தோய்த்து துவைத்திருக்கிறார்கள். ‘சகாப்தம்’நீ “என்றதும் அதான் ஓடலியேடா ‘என தல மேலேயும் கை வைத்திருக்கிறார்கள்.”

“அந்த எலிசா ?”

“அது வெறும் கலர் முருகா! சார்லியை சொல்லலாம். பாராட்டலாம் .ஆனால் கந்தா…இந்த ரவி மரியா என்கிற ஆளைக் கண்டாலே எரிச்சல் ஏழேழு லோகத்தும் போகும் !”

“சரி அவ்வையே..என்ன மார்க் கொடுக்கப்போகிறாய்?”

 ” 3 / 5 முருகா!”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘

Tags: எலிசாகூர்காசாம் ஆண்டன்சார்லிநமோ நாராயணாமயில்சாமியோகிபாபுராஜ்பரத்
admin

admin

Related Posts

‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!

by admin
April 17, 2026
‘ரூம் பாய்’ – விமர்சனம்!
Reviews

‘ரூம் பாய்’ – விமர்சனம்!

by admin
April 17, 2026
ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.
Reviews

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

by admin
April 13, 2026
‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?
Reviews

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

by admin
April 12, 2026
‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!
Reviews

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

by admin
April 11, 2026

Recent News

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !

April 21, 2026
நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

April 21, 2026
‘உப்பு புளி காரம்’ படக்குழுவின் அடுத்த படைப்பு,  ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!

‘உப்பு புளி காரம்’ படக்குழுவின் அடுத்த படைப்பு, ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!

April 21, 2026
26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !

26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !

April 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?