
தீபாவளிக்கு வெளியான படங்களில் பிகில் படம் வசூலில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது.
பொதுவாக விடுமுறை நாட்களில் மாஸ் நடிகர் படங்கள் நல்ல வசூலை பெற்று விடும். சென்னையில் இது நடந்து வருவதுதான்.
யார் படம் அதிக வசூலைத் தந்தது என்பதற்காக மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் தங்களின் வலுவைக் காட்ட ஒரே படத்தை பல தடவை பார்த்து விடுவார்கள். இதில் அவர்களுக்குள்ளேயே பலத்த போட்டி நடக்கும்.
அஜித்- விஜய் இந்த மாஸ் நடிகர்களின் ரசிகர்கள்தான் தங்களின் வலுவை அடிக்கடி டிவிட்டரில் காட்டி வருகிறார்கள்.
பிகில் படம் வெள்ளியில் தொடங்கி திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு ஒண்ணேமுக்கால் கோடி வரை வசூல் செய்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை படக்கென 85 லட்சமாக குறைந்து இருக்கிறது.
இனிவரும் நாட்களில் மிகவும் குறைந்து விடும் என்றே எதிர்பார்க்கிறார்கள். இந்த படம் பல படங்களை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் மிக்ஸர் படம் என்பதை விமர்சகர்கள் புட்டுப் புட்டு வைத்து விட்டார்கள். அட்லீயின் படத்தை அவரே சுட்டிருக்கிறார் என்பதை பிரபல இணையதளம் சுட்டிக் காட்டி இருக்கிறது.












