Wednesday, November 4, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ராதிகாவிடம் பிடிக்காத விஷயம்!- மனம் திறக்கும் சரத்குமார்!! .

admin by admin
January 26, 2020
in News
426 4
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து, அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்காதில் உருவாகியுள்ள  ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து சரத்குமார் கூறியதாவது :-

சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.அண்மையில் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். இயக்குநர் தனா இயக்குநர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் கதையை எங்கள் இருவருக்கும் கூறினார். கதையைக் கேட்டதும் இருவருக்கும் பிடித்திருந்தது.

You might also like

நடிகர் வெற்றியின் ‘பிளாக் கோல்டு’: நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியின் ‘ஜான் டோ’ நவம்பர் 14 ரிலீஸ்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்த புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள், வெற்றி தோல்விகள் ஆகியவற்றை எப்படி சந்திக்கின்றார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதில் நடிப்பதில் எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்து வரும் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருவரும் போட்டியாக நினைத்ததில்லை. அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து அதற்கு என்ன தேவையோ அதை உள்வாங்கி அப்படி தான் நடிப்போம்.மேலும், ராதிகா சில விதிமுறைகளை வைத்திருப்பார். ஆனால், இப்படத்திற்காக அதை மீறிப் பணியாற்றினார்.

ஆரோக்கியம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். ஆகையால், உடலை ஆரோக்கியமாக பார்த்து கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று என் தந்தை கூறியதை நான் பின்பற்றி வருகிறேன். அது தான் நான் சுறுசுறுப்பாக இயங்க காரணம்.

ராதிகாவிடம் கோபம் மட்டும் தான் பிடிக்காத விஷயம். அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். கோவத்தை உடனே வெளிப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து.

மேலும்,  ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என்பது என் கருத்து. ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போது அவர்களின் மொழியில் பேசினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தனி தான். ஒருவரை தொடர்பு கொள்வதற்கு மொழி என்பது எளிமையான கருவி என்றே கூறலாம். எனக்கு ரஷ்ய மொழி, ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும்.

எங்கள் குடும்பத்தில் பல மொழிகள் பேசுபவர்கள் உண்டு. ராதிகாவும் தென்னிந்திய மொழிகள், சிங்களம், ஹிந்தி நன்றாக பேசுவார்.இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Tags: radhkasarathkumarsarathkumar
admin

admin

Related Posts

நடிகர் வெற்றியின் ‘பிளாக் கோல்டு’: நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!
News

நடிகர் வெற்றியின் ‘பிளாக் கோல்டு’: நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

by admin
November 4, 2026
அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியின் ‘ஜான் டோ’ நவம்பர் 14 ரிலீஸ்!
News

அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியின் ‘ஜான் டோ’ நவம்பர் 14 ரிலீஸ்!

by admin
November 4, 2026
சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்த புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
News

சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்த புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

by admin
November 4, 2026
பாரம்பரிய தீபாவளிப் பலகாரம். சமந்தாவின் சிறப்பு நேர்காணல்!
News

பாரம்பரிய தீபாவளிப் பலகாரம். சமந்தாவின் சிறப்பு நேர்காணல்!

by admin
November 3, 2026
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’  5 புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!
News

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ 5 புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

by admin
November 3, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?