
“மும்பையிலிருந்து வந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிற ஹீரோயின்கள் ,இங்கு செல்வாக்கையும் செல்வத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு திரைப்பட தினக்கூலி தொழிலாளர்களுக்காக ஒரு பைசா கூட கொடுக்கலியே! மெகா ஸ்டார் சிரஞ்சீவி தலைமையில் அமைந்திருக்கின்ற அந்த குழுவிடம் நடிகை லாவண்யா திரிபாதி மட்டும்தான் உதவி நிதி கொடுத்திருக்கிறார்”என்று குணசித்திர நடிகர் பிரம்மாஜி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஆந்திராவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் அதே கதைதான்.!
சொல்லப்போனால் இதுவும் ஒரு வகை சுரண்டல்தான்.! சொந்த மாநிலத்தில் செல்வாக்கு இல்லாமல் அனாதை மாநிலத்துக்கு வந்து செல்வத்தையும் செல்வாக்கினையும் வளர்த்துக் கொள்கிறவர்கள் வாழவந்த மாநிலத்தின் துயரங்களில் பங்கு பெறவில்லையெனால் அது சுரண்டல்தானே.!
பிரம்மாஜி இன்னொரு குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார்.பிற மாநிலங்களின் கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகள் ஆந்திராவுக்கு வந்து ‘சிறப்பாகவே’ சம்பாதிக்கிறார்கள் அவர்களும் கையை விரித்திருக்கிறார்கள் என்கிறார்.
“கொடுக்கிற மனம் இல்லாதவர்களிடம் நன்றியை எதிர்பார்ப்பது தவறு” என்று யாரையும் குறிப்பிடாமல் சொல்லியிருக்கிறார் பவன் கல்யாண்.












