
“இவர் கொடுத்தாரா,?”
“எப்ப கொடுப்பார்?”
“அரசாங்கங்கள் இவர் மீது வெறுப்பில் இருப்பதால் கொடுக்கவில்லையா?”
இப்படி எத்தனையோ கேள்விகள் தளபதி விஜய்யை துளைத்தன.
ஆனாலும் இதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு விஜய்யின் நற்பணி இயக்கத்தினர் ஆங்காங்கே கொரானா துயர் துடைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது தளபதி 1.30 கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக தளபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பிரதமர் நிதி உதவி 25 லட்சம்,தமிழ்நாடு சி.எம் .உதவி நிதி 50 லட்சம் ,கேரளா சி.எம்.உதவி 10 லட்சம் .பெப்சி தொழிலாளர்கள் உதவி நிதி 25 லட்சம் ,கர்நாடக.ஆந்திர ,தெலங்கானா ,பாண்டிச்சேரி முதல்வர்கள் நிதியாக தலா 5 லட்சம் வீதம் வழங்கப்பட்டிருக்கிறது.












