
உத்திரபிரதேசத்தில் புலந்த்க்ஷர் மாவட்டத்தில் ஒரு சிவன் கோவில்.!படத்தில் காணலாம்.
அந்த கோவிலில் ஜெகதீஷ்,ஷேர்சிங் என இரண்டு சாமியார்கள் கொலை செய்யப்பட்டிருந்தார்கள் . வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டு இருந்தனர் என்பதாக முதலில் சொன்னார்கள் . தற்போது தடியால் அடித்துக் கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள்.
கோவிலுக்கு பக்கத்திலேயே சுற்றிக்கொண்டிருந்த முரளி என்பவனைதான் கொலையாளி என்பதாக அடையாளம் கண்டிருக்கிறார்கள். இவன் அந்தப்பகுதியில் அரை நிர்வாணமாக சுற்றிக் கொண்டிருந்திருக்கிறான்.
சாமியார்களின் ஒரு ஜோடி குறடு காணாமல் போனதால் அந்த மூவர்க்கும் பிரச்னை இருந்ததாக சொல்லப்படுகிறது.
கைது செய்யப்பட்டபோது முரளி கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது .
“கடவுளின் விருப்பம் “என்பதாக அந்த படுகொலையைப் பற்றி சொன்னான் என்கிறார்கள் போலீசார்.












