பாலிவுட்டில் பரவியுள்ள நெபோட்டிசம் கோலிவுட்டிலும் பரவியிருப்பதாக தற்போதுதான் அரசால் புரசலாக சொல்லிவருகிறார்கள். வாரிசு நடிகர்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற சர்ச்சை அங்கு வெடித்திருக்கிறது.
ஸ்ருதிஹாசன் அந்த விஸ்வரூப நெப்போடிசம் பற்றி என்ன சொல்கிறார்?
” தற்போது ஏன் இது கேட்கப்படுகிறது என்பதை அறிவேன், நான் எப்போதுமே சொல்வது போல, நெப்போடிசம் சினிமாவில் நுழைய ஒரு சாவியாக மட்டுமே இருந்தது.
இதுவரை எந்த படத்திற்காகவும்,எனது தந்தை கமல்ஹாசனிடம் உதவி கேட்டது இல்லை .
லண்டனில், இசை நிகழ்ச்சி நடத்த நான் முயன்ற போது அங்கு எனக்கு யாரையுமே தெரியாது , அங்கே இசைக் கச்சேரியை நடத்தி பாராட்டுக்களை பெற்ற போது தான் எனது திறமைக்கான வலிமையை உணர்ந்தேன்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், லாபம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போல, வேறு எந்த செட்டிலும் அவ்வளவு சந்தோஷமாக உணர்ந்தது இல்லை. எஸ்.பி. ஜனநாதன், எனது தந்தையின் நீண்ட கால நண்பர், சமூக சிந்தனைகளுடன் படம் எடுப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர், விஜய்சேதுபதி உடன் இணைந்து நடித்துள்ள அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.












