
போதை மருந்து வியாபாரம் கர்நாடக மாநிலத்தில் கொடி கட்டிப் பறக்கிறது.இதில் கன்னடத்து திரை உலகினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி சில நடிகைகளை காவல் துறை கைது செய்திருக்கிறது.
நடிகைகளில் ஒருவர் ராகினி திவேதி. இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு வழுக்கி விழுந்து முதுகில் காயம் ஏற்பட்டுவிட்டதாம். பெங்களூரு மத்திய சிறையில் அவருக்கு அளிக்கப்பட சிகிச்சை பலன் அளிக்கையில் என்பதாக சொல்லியிருக்கிறார்.
இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவரது வக்கீல் வழியாக நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார். இத்துடன் தன்னுடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட டேப்லெட் ,பெண் டிரைவ் ஆகியவைகளை திருப்பித்தரச்சொல்லி மற்றொரு மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்.
ஆட்சேபனை இருந்தால் அரசுத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டு வழக்கினை தள்ளி வைத்திருக்கிறது.












