Friday, August 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ரொமான்டிக் டிராமாவாக உருவான “ஏன் என்னை ஏதோ செய்தாய்” !

admin by admin
August 28, 2026
in News
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !

காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?

‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’! – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!

Anthony’s Atelier நிறுவனம் சார்பில்  எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”.மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்”  படம்  வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து,  இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் நடிகர் ஜீவா ரவி பேசியதாவது.., 
“பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கம். நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை என்பதுதான் உண்மை. இந்தப் படத்திற்காக அனைவரும் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
யங் கிரியேட்டர், யங் ஹீரோ, யங் புரொடியூசராக இருக்கும் ஆண்டனியை உங்கள் சார்பாக வரவேற்கிறேன். அதேபோல், புதிய முகமாக அறிமுகமாகும் மதுமிதாவுக்கும் வாழ்த்துகள். நல்ல கிரியேட்டர்களும் தயாரிப்பாளர்களும் வரும்போது கலைஞர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தில் வழக்கமான அப்பா கதாபாத்திரத்தைவிட வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான அப்பாவாக நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ஆண்டனிக்கு நன்றி. கவிஞர் கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் மிகவும் அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கின்றன. இரண்டு இசையமைப்பாளர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் பியட்ரோ வில்லானி படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆதம் நாசர், நவ்யா சுஜி உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் சரியான இடத்திற்கும், சரியான ரசிகர்களிடமும் சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.”
இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் டி. ஆண்டனி பேசியதாவது.., 
“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தை உருவாக்கும் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.சென்னைக்கு வந்த புதிதில் சி.வி. குமார் சார் மூலம் ஹரிஷ், சந்தோஷ் ஆகியோர் அறிமுகமாகி, தயாரிப்பு பணிகளில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். தயாரிப்பு மேலாளர் விஜய் அண்ணாவும் படப்பிடிப்பு தொடக்கம் முதல் முடியும் வரை சிறப்பாக பணியாற்றினார்.
கதாநாயகி மதுமிதா இந்தப் படத்திற்காக 18 நாட்கள் வொர்க்ஷாப் செய்து, வேறு நகரம், வேறு மொழி என்றாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஜீவா ரவி சார் எனக்கு தந்தை போன்ற ஆதரவை வழங்கினார். ஆலம் ஷா, நவ்யா, ராஜேந்திரன் சிங், மாதங்கி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கலை இயக்குநர் சுரேந்தரன் அண்ணா கதாபாத்திரங்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அறைகள் உள்ளிட்டவற்றை மிகச் சிறப்பாக வடிவமைத்தார். ஜெய்கார் ஹரிநாத் இசையமைப்பாளராக மட்டுமின்றி, லைவ் சவுண்ட் பணியிலும் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அசோக் ஸ்ரீதரன் இந்தப் படத்தின் இசைக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்ததுடன், கார்த்திக் நேத்தா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களை இந்தப் படத்துடன் இணைக்க உதவினார்.
படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா சார் கொடுத்தார். முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர். அவருடைய வாழ்த்துகளும் தொடர்ந்து எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன. என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தொகுப்பிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மார்க்கெட்டிங் பணிகளில் விவேக் அமிர்தலிங்கமும், சதீஷ் அண்ணாவும் எனக்கு மிகுந்த உதவி செய்தார்கள்.
குறிப்பாக தனஞ்செயன் சார் செய்த உதவியை மறக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை படம் வெளியாகுமா என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. விநியோகம் தொடர்பான பிரச்சனையை அவரிடம் சொன்னதும், உடனடியாக உதவி செய்து அதை சரி செய்தார். அவருடைய உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது. சினிமா குறித்து அவர் பகிரும் வீடியோக்கள் மூலம் ஒரு புதுமுகமாக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் மிகவும் கடினமானதாகவும், பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் இருந்தது. இன்று இந்தப் படத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., “அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சில வாரங்களுக்கு முன்பு ஆண்டனியின் படத்தின் போஸ்டரை பார்த்து, படத்தை பார்க்க வேண்டும் என்று அவரை தொடர்புகொண்டேன். உடனடியாக பிரிவியூ ஏற்பாடு செய்து படத்தை பார்க்க வைத்தார். குறுகிய காலத்தில் உருவாகியிருந்தாலும், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ ஒரு அழகான, கவித்துவமான காதல் கதையாக உருவாகியுள்ளது.
ஆண்டனி, மதுமிதா தாஸ் இருவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆலம் ஷா, நவ்யா சுஜி, ஜீவா ரவி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள், அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக சிங்க் சவுண்டில், டப்பிங் இல்லாமல் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இவ்வளவு குறுகிய காலத்தில் தரமான படத்தை உருவாக்கியதற்கு சிறப்பான முன்தயாரிப்பே காரணம். சிறு படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய படங்களுக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற சிறு படங்களுக்கும் ஊடக நண்பர்கள் ஆதரவு தர வேண்டும்.
தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நாளை அனைத்து தயாரிப்பாளர்களுடனும் ஆலோசனை நடைபெறுகிறது. வெளியாகி 8 வாரங்கள் ஆன படத்தை ஓடிடி வாங்குவதில்லை, அது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசும் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, அனைவரும் கலந்தாலோசித்து தொழில்துறையை பாதிக்காத வகையில் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆண்டனி விரும்புவது போல இந்தப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
Anthony’s Atelier நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படம், காதல், தனிமை மற்றும் வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான். அவனது வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களும், அந்தக் காதல் அவனை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச் செல்கிறது என்பதுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.
பழைய காதல் கதைகளின் உணர்வுப்பூர்வமான அழகை தக்கவைத்துக் கொண்டு, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி. ஆண்டனி கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பை கவனித்துள்ளார். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். ஜோயி ரிடா பின்னணி இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி பாடல்களை எழுதியுள்ளனர்.
ஒலிப்பதிவு பணிகளை ஜெய்கார் ஹரிநாத் மேற்கொள்ள, சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர்.
வரும் செப்டம்பர் 4ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
admin

admin

Related Posts

படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !
News

படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !

by admin
August 28, 2026
காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?
News

காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?

by admin
August 27, 2026
‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’!    – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!
News

‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’! – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!

by admin
August 27, 2026
காஷ்மீர்  கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட  ’ஆபரேஷன் டிரால்’ !
News

காஷ்மீர் கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட ’ஆபரேஷன் டிரால்’ !

by admin
August 26, 2026
பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!
News

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

by admin
August 26, 2026

Recent News

படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !

படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !

August 28, 2026
காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?

காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?

August 27, 2026
‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’!    – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!

‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’! – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!

August 27, 2026
காஷ்மீர்  கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட  ’ஆபரேஷன் டிரால்’ !

காஷ்மீர் கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட ’ஆபரேஷன் டிரால்’ !

August 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?