Saturday, April 18, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“ஆசைப்படுகிறவர்கள் எல்லோரும் நாயகனாகி விட முடியாது!”-பேரரசு கருத்து.

admin by admin
March 11, 2021
in News
423 4
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்ச்சினிமா மேடைகளில் ‘பொங்குகிறவர்களில் ‘முதலிடம் தயாரிப்பாளர் கே.ராஜனுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். அடுத்து இயக்குநர் பேரரசு ,மற்றும் ஜாகுவார் தங்கம்.

You might also like

ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’: கவனம் கவரும் திகில் முயற்சி!

மித்தாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ” பகவான் ” !

கொரியன் ஃபேமிலி சாங் வைப்ஸ் –  ‘கான் சிட்டி’ படத்தின் முதல் சிங்கிள்!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் வந்தபோது இவர்களின் கொதிநிலையைப்பார்த்து  பயம் வந்தது. அந்த அளவுக்கு கலாசாரக்காவலர்களாக ஆபாசத்தை கண்டித்தார்கள்.

அவர்கள்தான் “நீ சுடத்தான் வந்தியா ?” என்கிற படத்தின் முன்னோட்டத்தில் இலக்கியா என்கிற டிக் டாக்  பெண்ணின் காட்சிகளை பார்த்து வாயடைத்துப் போய் விட்டார்கள். அந்த பெண்ணின் மார்பக பகுதிகளை படமாக்கப்பட்ட விதம் பற்றி ஏதாவது கண்டனம் தெரிவிப்பார்கள் என்று நினைத்ததற்கு மாறாக “கமர்சியல்” என்று ஒத்தடம் கொடுத்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. தற்போது பேரரசு சென்சார் குழு உறுப்பினர் என்பது கூடுதல் தகவல். பிஜேபியில் சேர்ந்ததன் பலன்.

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ்  இயக்கத்தில் ‘டிக்  டாக்’ இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான்  ‘நீ சுடத்தான் வந்தியா’.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.
இவ்விழாவில் படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும்போது, ” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற  ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன். 
பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன்.
நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை .அதற்கு ஒரு முன் தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு பொன்ராஜ் என்பவர் எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். பிறகுதான் நடிக்க வந்தேன்.படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை .நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா  இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார்.”என்றார் 
கதாநாயகியாக நடித்திருக்கும்  இலக்கியா பேசும்போது, ” இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்னை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.”என்று கேட்டுக்கொண்டார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசும் போது, ” நீ சுடத்தான் வந்தியா?’  தலைப்பு யாரை சுட வந்தாய்?  என்று  கேட்பது போல் இருக்கிறது. நான் யாரையும் சுட வரவில்லை. நான் வாழ்த்தத்தான் வந்தேன். இன்றைய காலகட்டத்தில் சினிமா எடுப்பது சிரமம். அதிலும் சிறிய பட்ஜெட் படங்கள் எடுப்பது மிகவும் சிரமம் .எடுப்பதை விட அதை வெளியிடுவது மிகமிக சிரமமான காரியம். ஒரு படத்தின் ஆரம்பமான முதல் நாள் படப்பிடிப்பின்போது  கிளைமாக்ஸ் எப்படி எடுப்பது என்று சிந்திப்பது போல் படம் படப்பிடிப்பு தொடங்கும் போதே எப்படி வெளியிடுவது என்ற சிந்தனையும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு வெளியிடுவது இன்று சிரமமாக இருக்கிறது.”என்றார் .
தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது,
“இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளை பாடலில் பார்த்தோம்.கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று  நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும் .ஏன் என்றால் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’  படம் நன்றாக ஓடியது .அது மாதிரி சில படங்களும் ஓடின. அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான், பயந்தேன்,மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூட போராட்டம் நடத்தினார்கள்.  படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது.”என்று ஆபாசத்துக்கு  ஆதரவாக பேசினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“இன்று நாடே  தேர்தல், கூட்டணி என்று பரபரப்பாக இருக்கின்ற நேரம் இது. இந்த நேரத்தில் இந்த பட விழா நடக்கிறது.இந்தப் படத்தின் தயாரிப்பாளர்  அருண்குமார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பதாகச் சொன்னார். அவர் விருப்பப்பட்டு வரவில்லை.வேறு வழியில்லாமல் வந்திருப்பதாகத் தனது சூழ்நிலையைக் கூறினார். இன்று ஆளாளுக்கு கதாநாயகன் ஆகவேண்டும் என்று ஆசையில் வருகிறார்கள். ஆசைப்படுபவர்கள் எல்லாம்  கதாநாயகனாக முடியாது. ஆசைப்பட்டால் மட்டும் போதாது.
முன்பு குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது டிக்டாக்கில் இருந்து சினிமாவுக்கு வருகிறார்கள். இது ஒரு கால மாற்றம் தான். இலக்கியா  டிக்டாக்கில் இருந்து வந்திருக்கிறார்.
நாம் விதவிதமான உடைகள், உடுத்துகிறோம். ஆனால் எல்லாம் மானத்தை மறைப்ப தற்காகத்தான். அது போல பல வகையான படங்கள் எடுத்தாலும் சினிமா என்பது பொழுது போக்கிற்காகத் தான் .அது காதலைச் சொல்லலாம்,நகைச்சுவையைச்  சொல்லலாம் ,அரசியல் பேசலாம், நல்ல கருத்துகளைச் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் சினிமா பொழுதுபோக்கிற்காகத்தான். அதுபோல சினிமாவில் கவர்ச்சியும் ஓர் அங்கம். இந்த படத்தின் கவர்ச்சி வியாபாரத்துக்காக என்று புரிந்துகொள்ள முடிகிறது.” என்று இலக்கியாவின் கவர்ச்சிக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி.கதிரவன் கலந்து கொண்டு பேசினார் 
 விழாவில் படத்தின்  இயக்குநர் துரைராஜ்,ஒளிப்பதிவாளர்செல்வகணேஷ்,இசையமைப்பாளர் துரைராஜன், பாடகர்  கானா சேது, பாடலாசிரியர் லோகேஷ்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Tags: அருண்குமார்கே.ராஜன்ஜாகுவார் தங்கம்நீ சுடத்தான் வந்தியாபி.வி.கதிரவன்பேரரசு
admin

admin

Related Posts

ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’: கவனம் கவரும் திகில் முயற்சி!
News

ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’: கவனம் கவரும் திகில் முயற்சி!

by admin
April 17, 2026
மித்தாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ” பகவான் ” !
News

மித்தாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ” பகவான் ” !

by admin
April 17, 2026
கொரியன் ஃபேமிலி சாங் வைப்ஸ் –  ‘கான் சிட்டி’ படத்தின் முதல் சிங்கிள்!
News

கொரியன் ஃபேமிலி சாங் வைப்ஸ் –  ‘கான் சிட்டி’ படத்தின் முதல் சிங்கிள்!

by admin
April 17, 2026
துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு! ஆகஸ்ட் 2026 ல் வெளியாகிறது!
News

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு! ஆகஸ்ட் 2026 ல் வெளியாகிறது!

by admin
April 17, 2026
ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும்  குற்றம் கடிதல் 2, !
News

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

by admin
April 16, 2026

Recent News

மித்தாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ” பகவான் ” !

மித்தாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ” பகவான் ” !

April 17, 2026
கொரியன் ஃபேமிலி சாங் வைப்ஸ் –  ‘கான் சிட்டி’ படத்தின் முதல் சிங்கிள்!

கொரியன் ஃபேமிலி சாங் வைப்ஸ் –  ‘கான் சிட்டி’ படத்தின் முதல் சிங்கிள்!

April 17, 2026
துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு! ஆகஸ்ட் 2026 ல் வெளியாகிறது!

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு! ஆகஸ்ட் 2026 ல் வெளியாகிறது!

April 17, 2026
ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும்  குற்றம் கடிதல் 2, !

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

April 16, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?